சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும், 30ம் தேதி தாராபுரம் வருகிறார். தொடர்ந்து ஏப்.,2ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தாராபுரம் வருகிறார். தொடர்ந்து ஏப்., 2ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறார். மதுரையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும், 26ம் தேதி பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில், பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக, அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள ஏப்., 1ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டிக்கு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE