அவருக்கு இவரு...இவருக்கு அவரு...

Added : மார் 22, 2021
Advertisement
சேலம் தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக பாலசுப்ரமணியன், அ.ம.மு.க., சார்பில், வெங்கடாஜலம் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, வெங்கடாஜலம் வீடு உள்ள பகுதியில், பாலசுப்ரமணியன் பிரசாரம் செய்தார். அப்போது, பெண்கள் சிலர் குறைகளை கொட்டினர். அவர்களை சமாதானப்படுத்திய அவர், 'இப்பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் நல்லவர் தான். அவர் சார்ந்துள்ள கட்சி தான் சரியில்லை.


சேலம் தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக பாலசுப்ரமணியன், அ.ம.மு.க., சார்பில், வெங்கடாஜலம் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை, வெங்கடாஜலம் வீடு உள்ள பகுதியில், பாலசுப்ரமணியன் பிரசாரம் செய்தார். அப்போது, பெண்கள் சிலர் குறைகளை கொட்டினர். அவர்களை சமாதானப்படுத்திய அவர், 'இப்பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் நல்லவர் தான். அவர் சார்ந்துள்ள கட்சி தான் சரியில்லை. அவருக்கு ஓட்டுப்போட்டு வீணடித்து விடாமல், எனக்கு ஆதரவு தாருங்கள்' என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு பின், பாலசுப்ரமணியன் வீடு உள்ள பகுதியில், வெங்கடாஜலம் பிரசாரம் செய்தார். அப்போது, 'பாலசுப்ரமணியன் நல்லவர் தான். அவரை உருவாக்கி, கட்சி பணியில் அமர்த்தியவன் நான். என் சிஷ்யராக உள்ள அவர், சார்ந்திருக்கும் கட்சி தலைமை தான் சரியில்லை. அதனால், எனக்கு ஆதரவு தாருங்கள்' என்றார்.இருவரது பேச்சையும் கேட்ட கட்சியினர், 'அவருக்கு இவர் இவருக்கு அவர் காண்டக்ட் சர்டிபிகேட்...' என, கிண்டலடித்தனர்.


அவருக்கு இவரு இவருக்கு அவரு ! ஒருவருக்கு ஒருவர் நற்சான்றிதழ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X