அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை பார்த்து கணக்கு கேட்டால் மரியாதை கெட்டுவிடும்: கமல் ஆவேசம்

Updated : மார் 24, 2021 | Added : மார் 22, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
நாகப்பட்டினம் :''என்னை பார்த்து கணக்கு கேட்டால், மரியாதை கெட்டிடும். நான் சம்பாதித்த பணம் மக்களுடையது; முறையாக வரி செலுத்தியது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.நாகை, பூம்புகார், வேதாரண்யம் தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்து, நேற்று நாகையில் அக்கட்சியின் தலைவர் கமல் பேசியதாவது:நாங்கள் கட்சி
என்னை பார்த்து கணக்கு , மரியாதை கெட்டுவிடும்: கமல்

நாகப்பட்டினம் :''என்னை பார்த்து கணக்கு கேட்டால், மரியாதை கெட்டிடும். நான் சம்பாதித்த பணம் மக்களுடையது; முறையாக வரி செலுத்தியது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.நாகை, பூம்புகார், வேதாரண்யம் தொகுதிகளில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரித்து, நேற்று நாகையில் அக்கட்சியின் தலைவர் கமல் பேசியதாவது:

நாங்கள் கட்சி துவக்கியவுடன், அடுத்த அமாவாசை வரை தாங்காது என்றனர். இப்போது, அவர்களுக்கு பவுர்ணமி போய், அமாவாசை துவங்கி விட்டது. நான் பேசுவது திமிர் இல்லை. மக்கள் மீதான நம்பிக்கை. ஒரு முறை நேர்மையை நம்புவோம் என்று மக்கள் வருகின்றனர்.
வாசலில் மட்டும் கோலம் போட்டால் பத்தாது. வீடும் சுத்தமாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என நாங்கள் கூறியபோது கொக்கரித்து சிரித்தவர்கள், இன்று அவமானப்பட்டாலும் பரவாயில்லை என காப்பியடிக்கின்றனர். இதுபோல் நல்லதுகளுக்கும் காப்பியடிக்க, 'கியூ'வில் நில்லுங்கள். சாராயக் கடைகளை பாதிக்கு மேல் மூடி விடுவோம் என்று சொல்லுங்களேன்.

அவர்கள், ஆளாளுக்கு ஒரு சாராய பேக்டரியை வைத்திருப்பதால் கூற மாட்டார்கள். ஹெலிகாப்டரில் எப்படி வருகிறாய், காசு எங்கிருந்து வருகிறது என்று கேட்கின்றனர். மக்களிடம் இருந்து நான் சம்பாதித்தது. முறையாக வரி கட்டியது. எங்கள் வீட்டில் வந்து பாருங்கள், மூட்டை மூட்டையாக அன்பிருக்கும். வேறு இடத்தில் பாருங்கள், மூட்டை மூட்டையாக பணம் இருக்கும்.நீ, என்னை பார்த்து கணக்கு கேட்காதே, மரியாதை கெட்டிடும்.

அப்போது தேர்தல் கமிஷன் மரியாதையையும் தாண்டி, உண்மைகள் சொல்ல வேண்டியிருக்கும். உங்களை திட்ட மாட்டேன். தனி மனித தாக்குதல் இருக்காது. ஊழலை பற்றி பேசித்தான் ஆக வேண்டும். நினைவுப்படுத்தித்தான் ஆக வேண்டும். மக்கள் நீதி மய்யத்தை ஆட்சியில் அமர்த்தினால், 5,000 ரூபாய் இல்லை. 5 லட்சம் ரூபாய்க்கான நலத்திட்டங்கள் உங்களுக்கு வரும். எங்கள் அமைச்சர்கள், கை வைத்தால் கையை தட்டி விடுவேன். காப்பு போட்டு சிக்கு அனுப்புவேன். அங்கே போய் ஷாப்பிங் செய்யும் வசதி செய்து தர மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து அவர், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu - Nagaipattinam,இந்தியா
24-மார்-202103:44:33 IST Report Abuse
Muthu முதல் ரிவிட் இந்த ..குத்தான் இந்த உலக்கை நாதன் தான் ஊழலை ஒளிக்கப்போகிறது?? ஒரு சீட் கூட வெற்றியில்லாத நிலையில் இவரு முதலமைச்சர் வேட்பாளர். எல்லா தொகுதி ஓட்டுகளை கூட்டினால் கூட 5000 தெரியுமான்னு பாருங்க.. காமெடி பண்ணாதீங்க.. நீங்க விஷக்கிருமி என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் கூறுகிறார். என்ன பதில்.. இடஒதுக்கீடு பற்றி கேட்டால் ப ப ப ப ப ப ..... எங்க அப்பாவை பேச சொல்றார்.. ஆகா அரசியல் தெரியலை.. முக்கிய கேள்வியை தவிர்க்கிறார் என்றால் இவரெல்லாம் அரசியலில் ஒரு நொடி கூட தயங்கமாட்டார் என கரு. பழனியப்பன் தெளிவாக உன்னை புரட்டி எடுக்கிறார்... ஏதாவது பதில்???
Rate this:
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
23-மார்-202123:42:32 IST Report Abuse
babu எதனை பிரோடுசேர் காலி பண்ணி சம்பாரிச்சியோ
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
23-மார்-202122:42:30 IST Report Abuse
GANESUN ஒருத்தரு தீமுகாவே பீஜேபியின் பீ டீம் காசு குடுத்து காங்கிரஸ்ஸ காலிபண்ன செய்யுதுன்னு சொல்றாரு, இங்க என்னடான்னா கமல் கட்சி பீஜேபியின் பீ டீம் தீமுகாவ காலி பன்றதுக்றதுக்குன்றாங்க நாராயணா அரசியல்ல இது புதுசா இருக்குப்பா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X