பிணத்தை வச்சு வசூல் வேட்டை... : பணம் தின்னி ‛கழுகுகளின்' சேட்டை!

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021
Advertisement
அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், வெயிலை காட்டிலும் தகித்தது. அப்படியொரு ஒரு மதிய வேளையில், ஆட்டோவில் சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா.உள்ளே நுழைந்ததுமே, ''என்னக்கா உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்க, வாங்க ஆஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாம்,'' என கூற, ''ஆமான்டி மித்து, சளி பிடிச்ச மாதிரி இருக்கு. 10 நிமிஷம் உட்காரு. ரெடியாயிட்டு வர்றேன்,'' என்றாள்
சித்ரா_மித்ரா

அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், வெயிலை காட்டிலும் தகித்தது. அப்படியொரு ஒரு மதிய வேளையில், ஆட்டோவில் சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா.உள்ளே நுழைந்ததுமே, ''என்னக்கா உடம்பு சரியில்லைன்னு சொன்னீங்க, வாங்க ஆஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாம்,'' என கூற, ''ஆமான்டி மித்து, சளி பிடிச்ச மாதிரி இருக்கு. 10 நிமிஷம் உட்காரு. ரெடியாயிட்டு வர்றேன்,'' என்றாள் சித்ரா.

அடுத்த சில நிமிடத்தில் வண்டியை மித்ரா ஓட்ட, அமர்ந்த சித்ரா, ''கொஞ்சம் மெதுவா போடி,'' சொன்னதும் நிதானமாக ஓட்டினாள் மித்ரா.

''எல்லா பக்கமும் கொரோனா ஸ்பீடா பரவிட்டு இருக்குதுக்கா. ஜாக்கிரதையா தான் இருக்கணும். முக கவசம் கட்டாயம். 3 நாளுக்கு மேல காய்ச்சல் இருந்தா, டெஸ்ட் பண்ணிக்கிறது நல்லது,''

''ஆபீஸில வேல செய்றவங்க, வீட்ல இருக்கவங்கன்னு எல்லாரும் 'மாஸ்க்' போட்டுக்கணும்னு, சுகாதாரத்துறை அதிகாரிங்க சொல்லிட்டே இருக்காங்க. அப்படி மாஸ்க் போடாம, இருக்கிறவங்ககிட்ட, அபராதம் வசூல் பண்றாங்க,'' இடைவெளியின்றி பேசினாள் மித்ரா.

''அது சரிடி. 'மாஸ்க்' விஷயத்துல கூட, அதிகாரிகளுக்கு 'பொலிடிக்கல் பிரஷர்' தர்றாங்களாம்,''

''இதுல கூடவா… இது எங்கீக்கா,''

''இங்கதான் அவிநாசியில, ெஹல்த் டிபார்ட்மென்ட்காரங்க, கடை, கடையா போய் 'மாஸ்க்' போடதவங்களுக்கு 'பைன்' போட்டிருக்காங்க. ஒரு, ஆபீஸ்ல, ரெண்டு லேடி ஸ்டாப்ஸ் 'மாஸ்க்' போடாம வேலை செய்துட்டு இருந்து இருக்காங்க. அவங்களுக்கு, 200 ரூபா பைன் போட்டு, ரசீதும் எழுதிட்டாங்க. அந்த லேடீஸ், தங்களோட ஓனருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லியிருக்காங்க,''

''உடனே அவரு, ெஹல்த் டிபார்ட்மென்ட்காரங்களை போன்ல கூப்பிட்டு, 'என்ற ஆபீசுக்குள்ள எப்டி வந்து பைன் போடலாம்? கட்ட முடியாது; கோர்ட்ல கேஸ் போட்டுக்கோ'னு, ஒருமையில மிரட்டியிருக்காராம். ரொம்பவே 'அப்செட்' ஆனவங்க, திரும்பி வந்துட்டாங்களாம்,''

''என்னமோ போங்கக்கா. எல்லாம் அந்த 'அவிநாசியப்பருக்கே' வெளிச்சம்'' என்றாள் மித்ரா.

அவர்களை 'ஓவர் டேக்' செய்து, ஒரு கட்சியின் பிரசார வாகனம் செல்ல, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம்' என, மைக்கில் முழக்கம் கேட்டது.

அதைக்கேட்ட, சித்ரா, ''லஞ்சம், ஊழலுக்கு பஞ்சமா என்ன? ஒரு அரசு ஊழியரு, வாங்கிய லஞ்சப்பணத்தை திருப்பி கொடுத்த தரமான சம்பவம் நடந்துருக்கு; உனக்கு தெரியுமா?'' என்றாள்.

''அடடே... இது எங்கீங்க்கா?'' ஆச்சரியத்துடன் கேட்டாள் மித்ரா.''அதே அவிநாசியிலதான். வாரிசு சர்டிபிகேட் கேட்டு ஒரு லேடி, வி.ஏ.ஓ., ஆபீசுக்கு போயிருக்காங்க. அந்த ஆபீஸ்ல இருந்த ஒரு ஊழியரு, எலக்ஷன் நேரத்தில சர்டிபிகேட் தர்றது ரொம்ப ரிஸ்க். இருந்தாலும், ஆபீசர்களுக்கு, பணம் கொடுத்தா வேலை முடியும்ன்னு சொல்லி, 11 ஆயிரம் ரூபா வாங்கியிருக்காரு,''

''இந்த விவகாரம், 'வட்ட' ஆபீசருக்கு தெரியவர, ஊழியர கூப்பிட்டு 'வார்ன்' பண்ணிட்டாங்க. பயந்து போன அந்த ஊழியரு வாங்கின பணத்த திரும்ப கொண்டு போய், அந்த லேடிகிட்டயே குடுத்துட்டாராம்,''சித்ராவின் போன் அலற, ''யாரு... சுந்தரமூர்த்தியா? ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு இருக்கேன். அப்புறம் கூப்பிடறேங்க,'' என பேசி இணைப்பை துண்டித்து, ''பல்லடத்தில, ஒரு ரெவின்யூ ஆபீசரு, சம்பளத்தை விட, கிம்பளம் ஜாஸ்தியாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அப்டீங்களா?''''ஆமான்டி, பொங்கலுாரில் நுாத்துக்கணக்குல மணல் லாரி ஓடுது. இதுக்கு, ரெவின்யூ ஆபீசரோட பர்மிஷன் இருந்தா போதும்; யாரும், எங்க வேணும்னாலும், மணல் அள்ளிக்கலாம். இதுல தான் அந்த ஆபீசரு மாசா, மாசம் மாமூல் மழையில நனையறாராம்,

''மருத்துவமனைக்குள் சென்ற இருவரும், வரவேற்பறையில் அமர்ந்தனர். அப்போது நர்ஸ் ஒருவர், 'மிஸ்டர் செந்தில்குமரன்' என்றழைக்க, நடுத்தர வயதுடைய ஒருவர் உள்ளே சென்றார். நிமிடங்கள் கரைய, டாக்டரிடம் 'செக்கப்' செய்து வெளியே வந்தாள் சித்ரா.

''ஏக்கா, டாக்டர் என்ன சொன்னாரு?''''சாதாரண சளிதான். மாத்திரை மட்டும் குடுத்திருக்காரு... சரி வண்டியை எடு,'' என, சித்ரா சொன்னதும், ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.மெயின் ரோட்டில், லோடு ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

உடனே, ''சிட்டில இருக்க டிராபிக் ஆபீசர், இப்பெல்லாம் லாரிக்காரங்க கிட்ட நேரடியாவே வசூல் வேட்டைல இறங்கிட்டாராம். ஒதுக்குப்புறமான இடத்துல 'ஜீப்' பை நிறுத்திட்டு, அவங்களை கூப்பிட்டு 'ஜீப்'புக்குள்ளயே வைச்சு 'டீல்' பேசி முடிச்சுடறாராம்,'' என்றாள் மித்ரா.

''யெஸ், நானும் கேள்விப்பட்டிருக்கேன். அவரோட பேர்லயே 'செல்வம்' இருக்கும் போது, வேறென்ன செய்வாரு,'' சிரித்த சித்ரா,

''இது பரவாயில்லடி. காங்கயத்தில, யாராவது சூைஸட் செஞ்சா, 'பாடியை' போஸ்ட்மார்ட் செய்யணும்னா கூட, 'வரி' வசூலிக்காம, விடறதில்லையாம்,''அவ்வழியே, கட்சியின் வி.ஐ.பி., ஒருவர் செல்ல, 'டிராபிக் ஜாம்' ஆனது.

ஒரு டிராபிக் போலீஸ் அதிகாரி, ''ஏம்பா… கண்ணன், வையாபுரி, ரெண்டு பேரும் என்ன பண்றீங்க. போய், கிளியர் பண்ணுங்க,'' என, வாக்கி டாக்கியில் சத்தம் போட்டார்.

''சிட்டியில, பல எஸ்.ஐ.,களை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. பலரும், ஒதுக்கப்பட்ட ஸ்டேஷனுக்கு போகாம, பழைய இடத்திலயே இருக்காங்களாம். இதை ஆபீசரும் கண்டுக்கறது இல்லையாம். அப்புறம் எதுக்கு, 'டிரான்ஸ்பர்' போடறாங்கன்னு, மத்தவங்க புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.

டிராபிக் கிளியர் ஆனது; இருவரும் கிளம்பினர்.''நம்ம மாவட்டத்துல, ஏழு தொகுதியில, 'டார்ச் லைட்'டில் நிக்கறாங்க. ஆனா, காங்கயத்தை மட்டும் விட்டுட்டாங்க. அங்க யாரு கேன்டிடேட்னு தெரியலையாம். கூட்டணி கட்சியிலேயும் ஆள் இல்லையாம்,''

''அதனால, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்காரர் ஒருத்தர நிறுத்தி வைச்சு, ஆதரவு குடுத்துட்டாங்க. அவருக்கு ஏக குஷியாம்,'' என்ற மித்ரா, சித்ரா வீட்டு முன் வண்டியை நிறுத்தினாள்.

''ஸ்ஸ்ஸ்ப்பா…என்ன வெயில்,'' அலுத்து கொண்ட, ேஷாபாவில் தளர்வாய் அமர்ந்தாள் சித்ரா, ''மித்து, டிவியை 'ஆன்' பண்ணு,'' என்றாள்.

'டிவி'யில், நில அபகரிப்பு தொடர்பான ஒரு செய்தி ஒளிபரப்பானது.''பல்லடம், அருள்புரத்தில, ஒரு பாட்டியோட பேர்ல, காம்ப்ளக்ஸ் இருக்கு. அதை விக்கறதுக்கு முடிவு பண்ணி, தன்னோட காம்ப்ளக்ஸ்ல லாரி தொழில் பண்றவர்கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே, பாட்டியின் அறியாமையை சாதகமாக்கி, காம்ப்ளக்ஸ் தன்னோட பேருக்கு மாத்திட்டாராம்,''

''டாக்குமென்ட்லயும் கையெழுத்த வாங்கிட்டாராம். இத தெரிஞ்சுகிட்ட தன்னோட சொத்த அபகரிக்க முயற்சி பண்றாங்கன்னு தெரிஞ்சுகிட்டு, அந்த பாட்டி, சி.எம்.க்கு., பெட்டிஷன் போட்டுட்டாங்களாம். இதுல, ைஹலைட்டான விஷயம், அந்த ஆசாமி சூலுார் தொகுதி வி.ஐ.பி.,யின் நெருங்கிய சொந்தமாம்,'' மித்ரா விளக்கினாள்.

''அட... அவங்கதான் இப்டி பண்ணுவாங்கன்னா, இவங்களுமா,'' ஆதங்கப்பட்ட சித்ரா, மியூசிக் சேனலுக்கு, மாற்ற, 'பரமசிவம்' கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது... என்ற பாடல் ஒளிபரப்பானது.

''ஏன், மித்து, சிட்டியில பல இடங்களில், 'ஸ்பா'ன்னு போர்டு வெச்சுடு, வேறு ஏதோ பண்றாங்களாம்,''

''ஆமாங்க்கா. கோயமுத்துாரிலிருந்து இருந்து டூப்ளிகேட் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்து, 'ஸ்பா' என்ற பெயரில், திருட்டுத்தனமான தொழில் நடத்துறாங்க. போலீசார் காதுக்கு போகும் போது, சும்மா 'ரெய்டு' பண்ணிட்டு, விட்டுடறாங்களாம்.

இதனால, செம காசு பார்க்கறாங்க,'' என்ற மித்ரா, ''ஆட்டோ வந்துடுச்சு. நா கெளம்பறேன். நல்லா ரெஸ்ட் எடுங்க,'' என்றவாறு, வெளியேறினாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X