சென்னை: கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொடர்புகள் மூலமாக கொரோனா பரவுகிறது. கொளத்தூர், நங்கநல்லூர், கோடம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் படிப்படியாக குறையும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து பரவலைக் கட்டுப்படுத்த உதவ வேண்டும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தலைமை செயலர் ஆலோசனை
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ குழுவினருடன், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE