அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி: நடந்தது என்ன?

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பவுல்டர்: அமெரிக்காவின் கொலரடோ நகரில் உள்ள மளிகைக்கடையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் கொலரோடாவில் உள்ள பவுல்டர் பகுதியில் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், மக்கள் அலறியடித்து
அமெரிக்கா, துப்பாக்கிச்சூடு, பலி, உயிரிழப்பு,

பவுல்டர்: அமெரிக்காவின் கொலரடோ நகரில் உள்ள மளிகைக்கடையில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலரோடாவில் உள்ள பவுல்டர் பகுதியில் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், மக்கள் அலறியடித்து வெளியேற முயற்சி செய்தனர். தகவல் அறிந்த போலீசார், அதி விரைவு அதிரடிப்படையினர், எப்பிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை காப்பாற்ற முயற்சியில் அதிரடியாக ஈடுபட்டனர். மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். போலீசார் விரைவாக செயல்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்தனர்.


latest tamil news
இது குறித்து தகவலை போலீசார் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட நபர், 35 வயது மதிக்கத்தக்க இவரை குறித்து , சம்பவ இடத்தில் இருந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaanambaadi - Koodaloor,இந்தியா
24-மார்-202108:56:14 IST Report Abuse
Vaanambaadi மார்க்க பந்து வேலையா?
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
23-மார்-202123:39:53 IST Report Abuse
naadodi சுட்டது ஒரு மூர்க்க மார்க்கன். இதில் பைடேன் கமலா பற்றி பேசவேண்டாம் கொள்வது தவிர வேறொன்றும் யாமறியோம் என்னும் கும்பலிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? (கொலராடோ ஒரு நகரமல்ல மாநிலம். போல்டர் நகரம்.)
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-மார்-202119:57:23 IST Report Abuse
Rajagopal அமெரிக்கா ஒரு சுதந்திர நாடான போது, ஐரோப்பாவிலிருந்து குடியேறிய மக்கள் தொகை குறைவு. தள்ளித்தள்ளி வீடுகள் கட்டிக்கொண்டு, அங்கு வாழ்ந்த மூத்த குடியினரை விரட்டி, எல்லா நிலங்களையும் எடுத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். அப்போது மூத்த குடியினர் பலமுறை அவர்களைத் தாக்கினாரகள். தங்களை பாதுகாத்துக்கொள்ள எல்லோரும் துப்பாக்கி, மற்ற ஆயுதங்களை வைத்துக்கொள்ள சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டது. அவர்களது அரசியல் அமைப்பு வந்தபோது அதில் இரண்டாவது சரத்தாக அனைவருக்கும் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு, தங்களை பாதுகாத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. தவிர, அந்த நாடு எப்படிப்போகும் என்று யாருக்கும் சொல்ல முடியவில்லை. இங்கிலாந்து அப்போதும் அவர்களை எந்த தருணத்திலும் தாக்கலாம் என்கிற நிலை. கொள்ளைக்காரர்கள் தொல்லை அதிகரித்தது. ஒருவேளை அரசாங்கமே நமது காங்கிரஸ், திமுக போல திருடர்களாகி விட்டால், அந்த அரசை ஆயுதப்போர் நடத்தி வீழ செய்து, அமெரிக்காவின் அரசியல் அமைப்பை நிலை நிறுத்தும் உரிமை குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எல்லா குடிமக்களுக்கும் துப்பாக்கி, ஆயுதங்கள் வைத்துக்கொள்வது அடிப்படை உரிமையாகி விட்டது. பொறுப்பாக மக்கள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் மன நோயாளிகள் கையில் துப்பாக்கி கிடைத்தால் இந்த மாதிரி நிறைய நடக்கும். அமெரிக்காவில் மனநோயாளிகள் அதிகம். தனிமை அதிகம். பக்கத்து வீட்டுக்காரர்களோடு யாரும் பழகுவதில்லை. யாரையும் நம்ப முடியாது. இந்த மாதிரி நிலையில் மனநோய் அதிகரிக்கிறது. கொலை செய்பவர்கள் அதிகம். ஒரு நல்ல எண்ணத்தோடு அமைக்கப்பட்ட சட்டம், நம் ஊரில் இடஒதுக்கீடு போல திசை தவறி தவறான வழியில் சென்று விட்டது. அதை மாற்ற முயன்றால் அடிப்படை உரிமை என்று சண்டைக்கு வருவார்கள்.
Rate this:
k.saravanan - Tiruvannamalai,இந்தியா
24-மார்-202109:37:01 IST Report Abuse
k.saravananசரியாக சொன்னிர்கள் ( அமெரிக்காவில் மனநோயாளிகள் அதிகம். தனிமை அதிகம். பக்கத்து வீட்டுக்காரர்களோடு யாரும் பழகுவதில்லை. யாரையும் நம்ப முடியாது ). நீங்கள் அங்கு வசிக்கிறீர்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X