அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக எம்எல்ஏ வென்றாலும் பாஜ., எம்எல்ஏ.,வாகவே செயல்படுவார்: ஸ்டாலின்

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ஒரு அதிமுக எம்எல்ஏ வென்றாலும், அவர் பா.ஜ., எம்எல்ஏ.,வாகவே செயல்படுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக.,வில் அமைச்சராக இல்லாமலேயே அமைச்சர் போல இருக்கும் கே.பி.முனுசாமி, ஜெயலலிதா
TamilnaduElections, DMK, Stalin, Campaign, திமுக, ஸ்டாலின், பிரசாரம்

கிருஷ்ணகிரி: ஒரு அதிமுக எம்எல்ஏ வென்றாலும், அவர் பா.ஜ., எம்எல்ஏ.,வாகவே செயல்படுவார் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக.,வில் அமைச்சராக இல்லாமலேயே அமைச்சர் போல இருக்கும் கே.பி.முனுசாமி, ஜெயலலிதா இறந்ததற்கு நீதி கோரி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவருக்கு கட்சிக்குள் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அவர் ஜெ., மரணம் குறித்து வாய் திறக்கவில்லை. 30 சதவீதம் கமிஷனுக்கு பெயர் போன முனுசாமி, பாமக.,விற்கு ஏஜென்டாகவே இருக்கிறார்.


latest tamil news



1991-96 வரையிலான ஜெ., ஆட்சியை விட, பழனிசாமி தலைமையிலான இந்த அரசு தான் அதிகளவு ஊழல் செய்துள்ளது. கொரோனா காலத்தில் மாஸ்க், துடைப்பம் வாங்குவதில் கூட ஊழல் செய்தனர். உள்ளாட்சி துறையை ஊழல்துறையாக மாற்றிவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஊழல்கள் செய்ததை கண்டுபிடித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.


latest tamil news


பா.ஜ., சார்பில் யாரும் வெற்றிப்பெற போவதில்லை. அதிமுக சார்பிலும் ஒரு எம்.எல்.ஏ கூட வெல்லக்கூடாது. ஏனெனில், ஒரு அதிமுக எம்எல்ஏ வென்றாலும் அவர் பா.ஜ., எம்எல்ஏ.,வாகவே செயல்படுவார். லோக்சபா தேர்தலில் ஒரேஒரு அதிமுக எம்பி வெற்றிப்பெற்று தற்போது அவர் பா.ஜ., எம்பி.,யாகவே உள்ளார். காவிரி உரிமை நிலைநாட்டவில்லை, நீட்டை தடுக்கவில்லை, ஜிஎஸ்டி வரியை குறைக்கவில்லை, தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை பெறவில்லை, எய்ம்ஸ் கொண்டுவரவில்லை. இந்த லட்சணத்தில் மோடியை டாடி என்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
23-மார்-202123:35:12 IST Report Abuse
babu Ithukku munnadi dmk congressaga seyal pattatha.
Rate this:
Cancel
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-202122:37:53 IST Report Abuse
முட்டாள் முல்லா டலீவரே.. நீங்க..அ.தி.மு.க. ,பி.ஜே.பி கூட்டணிக்கு மறைமுகமா பிரச்சாரம்.. பன்னுறீங்க.. கிஷோர் ஆப்பு அடிச்சுட்டான்.. இதுக்குதான்.. கொஞ்சமாவது கல்வி அறிவு .வேண்டும் என்பது....
Rate this:
Cancel
Suresh Pandian - Madurai,யூ.எஸ்.ஏ
23-மார்-202121:51:40 IST Report Abuse
Suresh Pandian இருக்கட்டும் உனக்கு என்ன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X