அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., தேர்தல் அறிக்கை வெளியீடு

Added : மார் 23, 2021
Share
Advertisement
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட, மாநில துணை செயலர் சுப்பராயன் எம்.பி., பெற்றார்.தி.மு.க., கூட்டணியில், இக்கட்சி, ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:• தமிழகத்தில் தாய்மொழித் தமிழை, கற்பிக்கும் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில்

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை, நேற்று வெளியிடப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட, மாநில துணை செயலர் சுப்பராயன் எம்.பி., பெற்றார்.

தி.மு.க., கூட்டணியில், இக்கட்சி, ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
• தமிழகத்தில் தாய்மொழித் தமிழை, கற்பிக்கும் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும், கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்த, தளர்வில்லாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
• நாட்டுப்புற கலைஞர்களை, நல வாரியத்தில் சேர்ப்பது விரைவுப்படுத்தப்படும். மாவட்டம்தோறும் சிறந்த கலைஞர்களுக்கு, கலைமாமணி விருது வழங்கப்படும்
• அனைத்து தொழில்களிலும், மாதம், 21 ஆயிரத்திற்கும் குறையாத வகையில், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்
• விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
• நடைமுறையில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீடு முறை பாதுகாக்க பாடுபடுவோம்
• அரசின் வருவாயில், 30 சதவீதம் நிதி, உள்ளாட்சிகளுக்கு கிடைக்கவும், உள்ளாட்சி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X