அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் மறுக்கவில்லை: கமல்

Updated : மார் 23, 2021 | Added : மார் 23, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
மயிலாடுதுறை: மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இருவருமே ஊழல் செய்யவில்லை என மறுக்கவில்லை. நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு என மயிலாடுதுறை தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசினார்.மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை
கமல், கமல்ஹாசன், kamal, Kamalhaasan,stalin,mkstalin, palanisamy, edapadi palanisamy,dmk, admk, mnm, பழனிசாமி, முதல்வர்  பழனிசாமி, திமுக ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை: மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இருவருமே ஊழல் செய்யவில்லை என மறுக்கவில்லை. நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு என மயிலாடுதுறை தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசினார்.

மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல் பேசியதாவது: தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். அடுத்த தலைமுறையினராவது நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு பகுதியிலும் ஒருசில சிறிய குறைகள் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதுமே வெறும் குறைகளாக இருக்கின்ற அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பழனிச்சாமி 10 லட்சம் கோடி ஊழல் செய்தாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் 20 லட்சம் கோடி ஊழல் செய்ததாக பழனிச்சாமி கூறுகிறார். மாறி மாறி குறை சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர தவறு செய்யவில்லை என்று யாரும் கூறவில்லை. இதனால் 30 லட்சம் கோடி மக்கள் வரிப்பணம் தான் காணாமல் போய் உள்ளது.


உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன்
latest tamil news
ஊழல் செய்தவர்கள் உள்ளே போனாலும் சிறையில் இருந்து ஷாப்பிங் போகிற அளவிற்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன. தலைமையில் இருந்து நேர்மையாக இருந்தால்தான் மக்களுக்கு நல்லது நடக்கும். கமலுக்கு இவ்வளவு கோடி சொத்துக்களா என்று கேட்கிறார்கள். ஆம் நீங்கள் கொடுத்தது தான். நடிகராக இருந்தபோது மக்கள் அளித்த சம்பளம். ஆண்டுதோறும் எனக்கு சம்பள உயர்வு கிடைத்தது. நான் அரசியலுக்கு வந்ததால் ஆண்டிற்கு 300 கோடி நஷ்டம்தான். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்துதான் அரசியலுக்கு வந்தேன். இதுவரை சினிமா நட்சத்திரமாக இருந்த நான் இனி உங்கள் வீட்டில் சிறு விளக்காக இருப்பேன். ஊர் போன்றும் நல்ல மனிதாக இருக்க வேண்டும். நல்ல தலைவராக இருப்பதோடு நல்ல மனிதராக இருந்தால் மக்கள் நம்மை தலைவராக மாற்றுவார்கள்.

நான் காசுக்கு ஆசைப்பட மாட்டேன். காந்தியை போன்று எளிமையாக வாழவேண்டும் என்று நினைக்கக்கூடியவன். மக்களுக்கு சேவை செய்வதற்காக கோவணம் கட்டிகொண்டு வருவேன். அதனால் நான் அந்த கட்சியை சேர்ந்தவர், இந்த கட்சியை சேர்ந்தவர் என்று நினைத்து விடார்கள். யார் நல்லவர்களாக இருந்தார்களோ, அவர்களை முன் உதாரணமாக நான் எடுத்துக் கொள்வேன். கட்சிக்கு அப்பாற்பட்ட எனது தலைவர் காந்தி.

தமிழக இளைஞர்கள் வேலை தேடும் பட்டதாரிகளாக இல்லாமல் வேலை கொடுக்கும் முதலாளிகளாக உருவாக வேண்டும். மக்களுக்கு இலவசங்களை அறிவித்து கொடுப்பது ஏமாற்று வேலை மக்களிடம் கொடுங்கோல் வரி போட்டும். டாஸ்மாக் கடைமூலம் வரும் பணத்தை கொண்டுதான் இலவசங்கள் வழங்குகின்றனர். சாராயம் விற்பது அரசின் முக்கிய பணியல்ல. திருடாத நல்ல தலைவர்கள் இருந்தால் தமிழகத்தில் அனைத்து துறைகளும் லாபகரமாக இயங்கும்.


latest tamil news
மக்களால் தகர்க்க முடியாத கோட்டை என்று எதுவுமில்லை. ஜனநாயகம் கோட்டையல்ல. மக்கள் வாழும் இடம். மக்கள் விழிப்புணர்வுடன் கேள்வி கேட்டால் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவார்கள். கிராமசபை கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்தை சுப்ரிம் கோர்ட் கேட்கும். இங்கு வந்துள்ளது போல் மக்கள் கிராமசபை கூட்டங்களுக்கு சென்று கேள்வி கேட்டு தீர்மானங்கள் நிறைவேற்றினால் உங்கள் பகுதி நிச்சயமாக வளர்ச்சி அடையும். தமிழகத்தல் ஊழல் அற்ற நேர்மையான ஆட்சி அமைவதற்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்களித்து நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
25-மார்-202114:17:36 IST Report Abuse
சோணகிரி அநீதி மையத்தின் எளிமை ஹெலிகாப்டரில் வந்து இறங்குது... அநீதி மையத்தின் நேர்மை வரி ஏய்ப்பு செய்து மூட்டை மூட்டையாய் குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கோடிகள் ரூபாய் கள்ளப்பணத்தில் சிரிக்குது....
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
24-மார்-202110:53:33 IST Report Abuse
Nellai tamilan கமல் நடிக்காம இருந்தா மொத்த பணமும் லாபம்னு தயாரிப்பாளர் கிட்ட கேட்டா சொல்லுவாங்க. நீங்க விளக்காகவும் இருக்க வேண்டாம் ...கவும் இருக்க வேண்டாம். ஆளை விடுங்க சாமி
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
24-மார்-202108:58:48 IST Report Abuse
karutthu முன்னூறு கோடி ரூபா இழப்பை விட்டுவிட்டு உன்னை யாரையா அரசியலுக்கு வரச்சொன்னது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X