நீலகிரியில் வசித்து வரும், ஈழுவா-தீயா மக்களுக்கு. கடந்த, 35 ஆண்டுகளாக ஜாதி சான்று கிடைக்கவில்லை. மாணவர்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர். பலமுறை மாநில அரசை அணுகி கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கடந்தாண்டு உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி முயற்சியால், முதல்வரிடம் மனு வழங்கப்பட்டது; இதன் பலனாக, இவர்களுக்கு, ஜாதி சான்று கிடைத்தது.இந்நிலையில், ஜாதி சான்று தந்து உதவிய அ.தி.மு.க.,வுக்கு, தேர்தலில் ஆதரவு அளிக்க ஈழுவா-தீயா மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான கூட்டம், ஊட்டி தனியார் ஓட்டலில் நடந்தது. ஈழுவா தீயா மக்கள் மாவட்ட தலைவர் சாத்தப்பன் தலைமை வகித்தார்.கட்சியின் குன்னூர் வேட்பாளர் வினோத், கூடலுார் வேட்பாளர் பொன் ஜெயசீலன், ஊட்டி பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் முன்னிலையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஈழுவா-தீயா நிர்வாகிகள் பலர் பங்கேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE