மடத்துக்குளம்... அனல் பறக்கும் களம் வலைதளங்களில் தனிநபர் விமர்சனம்

Added : மார் 24, 2021 | |
Advertisement
கடந்த 2011ல், தொகுதி சீரமைப்பில், மடத்துக்குளம் புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. உடுமலை ஒன்றியம் 35; மடத்துக்குளம் ஒன்றியம் 11 ஊராட்சிகள்; தளி, கொமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் என, முற்றிலுமாக கிராமங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி.இத்தேர்தலில், தொகுதி உருவாக்கப்பட்டதும் வெற்றி பெற்ற சண்முகவேலு, அ.ம.மு.க., விலும், முன்னாள்

கடந்த 2011ல், தொகுதி சீரமைப்பில், மடத்துக்குளம் புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது.

உடுமலை ஒன்றியம் 35; மடத்துக்குளம் ஒன்றியம் 11 ஊராட்சிகள்; தளி, கொமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், சங்கராமநல்லுார் பேரூராட்சிகள் என, முற்றிலுமாக கிராமங்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது இத்தொகுதி

.இத்தேர்தலில், தொகுதி உருவாக்கப்பட்டதும் வெற்றி பெற்ற சண்முகவேலு, அ.ம.மு.க., விலும், முன்னாள் பொள்ளாச்சி எம்.பி., மகேந்திரன், அ.தி.மு.க.,விலும், சிட்டிங் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் தி.மு.க., விலும், வேட்பாளர்களாக களமறிக்கப்பட்டுள்ளனர்.மூன்று வேட்பாளர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள்; செலவழிக்கவும் தயங்காதவர்கள் என்பதால், அதிருப்தியில் இருப்பவர்களை, தங்கள் கட்சியில் இணைப்பதை முக்கிய பணியாக செய்து வருகின்றனர்.

கடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மனோகரனை விட, தி.மு.க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், 2,000த்துக்கும் குறைவான ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். அப்போது, அ.தி.மு.க., வில், சீட் கொடுக்காததால், அதிருப்தியில் இருந்த சண்முகவேலு நடத்திய 'உள்குத்து' காரணமாகவே, தி.மு.க., வெற்றி பெற்றது என பரவலாக பேசப்பட்டது.

தொகுதியில், பெரியளவில் வளர்ச்சிப்பணிகள் செய்யாவிட்டாலும், அ.ம.மு.க., பிரிக்கும் ஓட்டு களால், எளிதாக நமக்கு வெற்றி கிடைக்கும் என தி.மு.க.,வினர், கெத்தாக வலம் வருகின்றனர் .தற்போது, வேட்பாளர்களுக்கு இடையிலான தனிநபர் விமர்சனங்களை, சமூக வலை தளங்களில், பரப்ப துவங்கியுள்ளனர்.தொகுதி மேம்பாட்டுப்பணிகள் குறித்து பெரியளவிலான வாக்குறுதிகள் எதுவும், இதுவரை வேட்பாளர்களால் வெளியிடப்படவில்லை. பசுமைக்கும், விவசாயத்துக்கும் பெயர் பெற்ற, மடத்துக்குளம் தொகுதியின், 3வது எம்.எல்.ஏ., வை, புதிய, நடுநிலை வாக்காளர்கள் தான், நிர்ணயிக்க உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X