திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: ராமதாஸ் ஆவேசம்

Updated : மார் 24, 2021 | Added : மார் 24, 2021 | கருத்துகள் (42) | |
Advertisement
திண்டிவனம்: ''கல்வி உள்ளிட்ட எல்லாவற்றிலும் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது'' என திண்டிவனம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுப்பேட்டையில் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
Ramadoss, Pattali Makkal Katchi, PMK

திண்டிவனம்: ''கல்வி உள்ளிட்ட எல்லாவற்றிலும் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது'' என திண்டிவனம் அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுப்பேட்டையில் மயிலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் ஏழ்மையில் வறுமையில் உள்ளது விழுப்புரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் வாழ்வாதாரம் இல்லை. குடிசைகள் அதிகமாக உள்ள இந்த மாவட்டம். எல்லாவற்றிலும் கடைசியாக இருக்கிறது. படிப்பில் கடைசி வறுமையில் கடைசி. ஆனால் மது விற்பனையில் மட்டும் முதலிடத்தில் உள்ளது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்னும் ஒரு மாதத்தில் குடும்பத்திற்கு ஒரு வாஷிங் மிஷின் வழங்கப்படும். சூரிய ஒளி அடுப்பு இலவசம் பெண்களுக்கு மாதம் ரூ.1500 அவர்களின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். இதை எல்லாம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். படிப்புதான் முக்கியம். படிப்பு வேலைக்கு ஒரு உத்தரவாதம். அதற்கான சட்டம் வருவற்கு உறுதுணையாக இருந்தவர் அமைச்சர் சண்முகம். அதற்கு முதல்வர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் அந்த சட்டம் (வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு) வந்திருக்காது.


latest tamil news



அந்த சட்டம் எந்த சட்டம் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சட்டத்தை பற்றி தெரிந்தவர்கள் கை துாக்குங்கள் (கூட்டத்தில் இருந்தவர்கள் கையை மேலே துாக்கினர்.) தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அது எங்கே வரப்போகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது என்று சொன்னால் ஒரு மணி நேரம் பேசலாம். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. இந்த ஆட்சியில் மின்வெட்டு இல்லை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
24-மார்-202117:42:53 IST Report Abuse
John Shiva   U.K பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை செய்யும் ஆன் அதிகாரியை பாதுகாக்கும் அண்ணா தி மு க.என்ன நடந்தது பொள்ளாச்சியில்.
Rate this:
Cancel
24-மார்-202117:04:41 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த வயதில் , இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டும் பிரச்சாரம் செய்ய வருகிறார் , ஆனால் கேப்டனை காணவில்லை , அவர் உடல் நிலை இதை விட மோசமாக உள்ளது. இனி தேமுதிக கூடாரம் காலி
Rate this:
Cancel
Barathan - chennai,ஆப்கானிஸ்தான்
24-மார்-202116:14:31 IST Report Abuse
Barathan கார் உள்ளவரையிலும், கடல் நீர் உள்ளவரையிலும், பார் உள்ளவரையிலும், பைந்தமிழ் உள்ளவரையிலும் தேசிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை... சே இது என் இப்போ வந்து போகுது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X