பொது செய்தி

தமிழ்நாடு

யாருக்காக, 'நீட்' தேர்வு ரத்து?

Updated : மார் 24, 2021 | Added : மார் 24, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
'மருத்துவ கல்லுாரிகளுக்கான நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழகத்தில், சில கட்சிகள் போராட்டங்கள் நடத்தியதை கண்டோம். அதே, நீட் எதிர்ப்பு, தற்போது, தேர்தல் பிரசார உத்தியாகவும் மாறியுள்ளது.இந்த கட்சிகள் சொல்வதை போல, 'நீட்' தேர்வால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? முன்பெல்லாம், மருத்துவ படிப்பில் சேர்க்கை என்றாலே,
NEET, நீட்

'மருத்துவ கல்லுாரிகளுக்கான நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழகத்தில், சில கட்சிகள் போராட்டங்கள் நடத்தியதை கண்டோம். அதே, நீட் எதிர்ப்பு, தற்போது, தேர்தல் பிரசார உத்தியாகவும் மாறியுள்ளது.


இந்த கட்சிகள் சொல்வதை போல, 'நீட்' தேர்வால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா?


முன்பெல்லாம், மருத்துவ படிப்பில் சேர்க்கை என்றாலே, கண்டிப்பாக, 'கேபிடேஷன் பீஸ்' இருக்கும். இதை, அரசு மருத்துவ கல்லுாரிகளில் உயர்ந்த மதிப்பெண் அடிப்படையில் இடம் பிடிக்கும், மாணவர்களை தவிர, வேறு யாராலும் தவிர்க்க முடியாது என்ற, நிலை இருந்தது. ஏனெனில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் வெறும், 2,150 இடங்கள் தான் இருந்தன, மற்ற இடங்கள் தனியார் கல்லுாரிகளில் தான் இருந்தன.


latest tamil news


கடந்த, 2000 முதல், 2015ம் ஆண்டு வரை, மருத்துவ படிப்பில் சேருவதற்கான போட்டியினால், தனியார் கல்லுாரிகளில், சேர்க்கை ஏதும் குறையவில்லை. அதனால், தனியார் கல்லுாரிகளின், 'கேபிடேஷன் பீஸ்' வருமானமும் குறையவில்லை. 'கேபிடேஷன் பீஸ்' என்பது, ஒரு மாணவருக்கு, 50 லட்சம் கூட வசூலிக்கப்பட்டதாக தகவல் உண்டு.

அதாவது, பணக்கார மாணவர்கள் மட்டுமே, தைரியமாக மருத்துவ படிப்பு கனவு காண முடியும் என்ற, நிலை இருந்தது. இதில், குறிப்பிடத்தக்க அளவில், மருத்துவர்களின் வாரிசுகளும் அடக்கம். கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், தமிழக அரசு புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளை அதிகளவில் நிறுவ தொடங்கியது. தற்போது, படிப்படியாக அதிகரித்து, அரசு கல்லுாரிகளில், 3,550 இடங்கள் உள்ளன. மேலும், இப்போது கட்டப்பட்டு வரும், புதிய மருத்துவ கல்லுாரிகளால், அடுத்த ஆண்டிற்குள், இடங்கள், 5 ஆயிரமாக உயரும் என, தெரிகிறது.

இதனால், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் வாயப்பு அதிகரிக்க தொடங்கிஉள்ளது. ஆனால், இதையும் விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு, கைகொடுத்தது நீட் தேர்வு தான். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் சேர்க்கை இருக்க வேண்டும் என்றான பின், பொருளாதார அந்தஸ்து ஒரு தடையல்ல என்ற சூழல், உருவாகி உள்ளது. மருத்துவர்களின் வாரிசுகள் தான், மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற அறிவிக்கப்படாத, குலக்கல்வி நிலை மாறி, தற்போது, அனைத்து தரப்பு மாணவர்களுக்கும், சம வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஏற்பாடு, ஏழை மாணவர்களின் வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கி உள்ளது. நீட் தேர்வு அமலுக்கு வந்தபோது, தமிழக பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களால், தேர்வை சமாளிக்க முடியவில்லை என்பது உண்மை தான். அதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டியது தமிழக அரசே. அந்த நேரத்தில், தமிழக பாடத் திட்டம், 15 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது.

பாடத் திட்டம் புதுப்பிக்கப்பட்ட பின், கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில், தமிழக மாணவர்கள், 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதேநேரத்தில், தேசிய அளவிலும், 56.44 சதவீதம் மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு இவ்வளவு நன்மை இருக்கும் போது, யாருக்காக ரத்து செய்ய கோருகிறார்கள்? அரசியல் தொடர்புள்ள நபர்கள் தான், அதிகளவில் தனியார் மருத்துவ கல்லுாரிகளை நடத்தி வருகின்றனர் என்பது, அனைவரும் அறிந்த விஷயம்.

நீட் தேர்வுக்கு பின், தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்ற, கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், 'கேபிடேஷன் பீஸ்' வசூல் கணிசமாக குறைந்து விட்டது. அது, ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு குறையாமல் இருந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. ஆக, நீட் ஒழிப்பு கோருபவர்கள், தன்னலத்திற்காக தான் குரல் எழுப்புகிறார்களே ஒழிய, ஏழை மாணவர்களின் நலனுக்காக அல்ல!
- ஆர்.கண்ணன்,
பேராசிரியர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran - Trichy,இந்தியா
25-மார்-202106:08:41 IST Report Abuse
Rajendran Dear all, I would like to present the NEET in Tamilnadu. Who ever tells the NEET is not required, I hope they are not exposed to education first. For social justice already given 7.5 percent and it's a good move. If NEET is avoided , then TN education will go into dark.Even TN enginnering also now in dark. Why because, the admission only based on plus two marks only. That is the mistake. There should be a entrance exam with that ion can be (i.e NEET) or some waitage shall be given for board score say 50%. If admission only based on plus two marks , the state board is preparing question papers such a way that it should be easier than the previous year, else past year student will come for competition. If the question papers tough, then grace marks are given to give opportunity for present year students. By which every year the education is degrading in the tem and full mark students are increasing every year. This is not the good practice for professional courses and if one missing the percentage in board his dream is out. But by keeping entrance exams the option is and a student can write next year and get it. Another advantage is the applicants are evaluated every year on par with other year students and it is not happening in ion based on mark. A student with mugup capacity will easily get the medical seat without entrance exam, a good student with foundation may not get the seat in medical, why because in CBSE getting full marks is very very difficult. In the outset iam not declaring NEET is required, but some entrance exam shall be kept and due percentage of weightage will be given to plus two marks to have balanced admission in medical and engineering without politics, for better education in our state. Example:
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
24-மார்-202121:48:15 IST Report Abuse
S.Baliah Seer அப்போ பள்ளி தேர்வு எதற்கய்யா? .நீட் கோச்சிங் சென்டர்களைத் தடை செய்ய ஒருத்தனும் பேசமாட்டேன் என்கிறான் இவன்களுடைய நோக்கம் பணம் உள்ளவன் மட்டும் எல்லாவற்றையும் வளைத்துக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24-மார்-202120:35:59 IST Report Abuse
Mirthika Sathiamoorthi நம்ம பொது புத்தியில் ஒன்னு இருக்கு இதெல்லாம் பேசுனா சமூக அக்கறையுள்ளவன்..உதாரணத்துக்கு ராணுவ வீரர்கள் தியாகம், தாயி போன்ற கடவுள் இல்லை கலாச்சாரம், இந்தியா... அதுமாதிரி இதோ ஏழைகளுக்கு உதவு...ஏழைகள்ங்கிற வார்த்தைக்கு இவங்களுக்கு அர்த்தம் தெரியுமோ தெரியாது...நீட்டினாள் ஏழைமாணவர்களுக்கு பயன்...கேபிடல் பீஸ் குறையும்..இங்கே எனக்கு புரியாத ஒன்னு கேபிடல் பீஸ் எங்கே வாங்குறாங்க? தனியார் மருத்துவக்கல்லூரியிலா? அரசு மருத்துவ கல்லூரியிலா? உங்கள் நீட் கேபிடல் பீஸ் வாங்கும் தனியார் கல்லூரிக்கு மட்டும் சரி..ஏன் அரசு கல்லூரிக்கும்? உடனே கேபிடல் பீசுன்னு சொன்னவங்க தகுதி தரம்ன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க...இப்போ அரசுக்கல்லூரியில் சேர நீட்டுக்கு முன் இருந்த கட் ஆப் மதிப்பெண் 200 க்கு என்னனு பாப்போமா? OC ( இது இதர வகுப்பு அல்ல COMPETATION ) 199.25 BC க்கு 198.25 BCM ( இஸ்லாமியர்களுக்கு ) 197.00 MBC க்கு 197.50 SC க்கு 194.50 அருந்ததியருக்கு 191.50 ST 188 ( இடவொதுக்கீட் பிரகாரம் 2% ) SC க்கு 200 க்கு 194.50 இந்த மதிப்பெண் எடுத்தால்மட்டுமே MBBS அரசு பள்ளியில் தெரியாம கேக்குறேன் இதைவிட இவர்கள் மருத்துவராக எண்ணத்தகுதிவேண்டும் ? பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கொடுக்காத தகுதியை நீட் கொடுக்குதுன்னு நம்புறோமா? தகுதி என்பதென்ன? தேர்வென்பதென்ன? அதிகமதிபென்னெடுக்கிறான் வெற்றிபெறுகிறான் இதையும் தாண்டி நம்மால் தேர்வெழுதி மதிப்பெண் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்...நீட்டுக்கு முன் மருத்துவம் கிடைக்குதோ இல்லையோ அனிதா மாதிரியான பெண்களையும் நம்பிக்கை கொள்ளவைத்த முறையை.. இந்த நீட் அந்த நம்பிக்கையை அடிச்சு துவச்சிருக்கே? காசிருந்தால்தான் கோச்சிங் சென்டர் போனால்தான் நீட் பாசகமுடியும் நம்மால் முடியாதுன்னு இன்று பலர் முயற்சியே செய்யாமல் பின்வாங்கும் முறைக்கு கொண்டுவந்திருக்கே..அதிக செலவில்லாமல் தரமான மருத்துவ அரசுக்கல்லூரிக்கு யார் சேரவேண்டும் செலவுகள் செய்ய முடியாதவனா? இல்லை கோச்சிங் சென்டரில் லட்சங்களை கொடுக்க முடிந்தவனா? இதுக்கு பேருதான் ஏழைக்கு உதவுவது..இங்கே யார் ஏழை?... சொன்னாரு கேபிடல் பீஸ் 1000 கோடி குறைஞ்சிருச்சாம் அப்புடின்னா கேபிடல் பீஸ் முறை ஒழியல அப்போ இப்போ உங்க அகராதியில காசுகொடுத்து சென்றவனெல்லாம் தகுதியானவன் அப்புடிதானே? ...அவருக்கு தெரியுமான்னு தெரியல இந்த 1000 கோடிகள் எங்கே போயிருக்கு தெரியுமா? நீட் கோச்சிங் சென்டருக்கு...ஒரு இடத்திலிருந்த கேபிடல் பீஸ் இன்னொரு இடத்துக்கு போயிருக்கு அவ்வளவே...நீட்டுக்கு முன் தமிழ் மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்புன்னு நிலைமை போயி நமது சீட்டை பிடுங்கி அடுத்தமாநிலத்துக்கு கொடுப்பது நீட்....மேலைநாடுகளில் வெளிநாட்டின மருத்துவர் தாதியர் வேலை செய்ய அந்நாட்டில் நடத்தப்படும் தேர்வில் பாசகவேண்டும்... நீடில் பாசியிட்டேன் நான் மருத்துவனாக எல்ல தகுதியும் இருக்கு அந்த பரிட்சையெல்லாம் எழுத்தமுடியாதுன்னு சொல்லட்டுமே பாக்கலாம் ...நீட் எழுதிவிட்டால் ஒருவன் தகுதியானவன் என்றால் அப்புறம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வேதுக்கு? அவரு கேட்டரு நீட் தடை யாருக்கு நான் கேக்குறேன் கேபிடல் பீஸ் வாங்காத கட் ஆப் 190 க்கு மேலுன்னு தகுதியை நிரநயித்த அரசு மருத்துவ கல்லூரியில் இந்த நீட் முதலில் யாருக்கு? எல்ல விலங்குகளையும் ஒண்ணா நிக்கவச்சு தென்னைமரம் யார் ஏறுறாங்களோ அவங்களுக்கே தகுதின்னு சொல்லி....குரங்கை தவிர யாரால் தென்னைமரம் ஏறமுடியும்ன்னு கேள்வியை அழகாய் புறம்தள்ளி மரமேறமுடியாமல் போன யானைக்கு தன திறமையின் மீதான சந்தேகத்தை விதைச்சு மறுபடி மறுபடி தென்னைமரம் ஏற முயற்சிக்க வச்சோம் பாருங்க.அதுதான் நீட் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X