பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தண்டனை தரவேண்டும்: ப.சிதம்பரம்

Updated : மார் 24, 2021 | Added : மார் 24, 2021 | கருத்துகள் (153)
Advertisement
ஜெனீவா: இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.,வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்த செயலினை கண்டித்த காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நியாயமான
TamilnaduElections, Chidambaram, Congress, Srilanka, Plea, UN, BJP, ADMK, சிதம்பரம், காங்கிரஸ், இலங்கை, தீர்மானம், ஐநா, இந்தியா, புறக்கணிப்பு, பாஜக, அதிமுக

ஜெனீவா: இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.,வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்த செயலினை கண்டித்த காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு தமிழகம் தகுந்த தண்டனையை தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக, பாரபட்சமற்ற முறையில், நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில், நேற்று (மார்ச் 23) ஓட்டெடுப்பு நடந்தது. இதில், 47 உறுப்பு நாடுகளில், 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராக வும் ஓட்டுப்போட்டன. இந்தியா உள்ளிட்ட, 14 நாடுகள், ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளிக்காமல் இந்தியா புறக்கணித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பி.,யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது; ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல். இச்செயல் ஒன்றே போதும், அதிமுக-பா.ஜ., கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு தகுந்த தண்டனையைத் தமிழகம் தரவேண்டும். வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (153)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
25-மார்-202112:51:42 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\பச்சை துரோகம் செய்த அதிமுக - பாஜ., கூட்டணிக்கு .......\\ ...... பரவாயில்லையே, இங்கேயும் அந்த கூட்டணிக்கு ரொம்ப பிடிச்ச "பச்சை" நிறம் வந்திடுச்சே ...........
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
25-மார்-202112:42:50 IST Report Abuse
veeramani துரோகம் பற்றி பேச சிதம்பரம் அவர்களுக்கு தகுதியில்லை . சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராக நெடுங்காலம் இருந்து வந்தவர். இன்றும் மிக மிக பின்தங்கிய மாவட்டமாகத்தான் உள்ளது. ஒரு தொழிற்ச்சாலைகள் வரவில்லை . இளைனர்கள் வெளிநாடு, வெளியூர்களுக்கு சென்றால்தான் வாழ முடியும்.
Rate this:
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
25-மார்-202112:30:44 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan நேர்மையாய் தேர்தலில் வெல்லாத இவர்கள் செய்வது சிகப்பு துரோகமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X