தமிழ்நாடு

தப்புக்கணக்கு! வேட்பாளர்கள் போட முடியாது .... அனைத்துக்கும் தொகை நிர்ணயம்

Updated : மார் 25, 2021 | Added : மார் 25, 2021
Share
Advertisement
கோவை : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களுக்கு, எவ்வளவு தொகை குறிப்பிட வேண்டும் என்பதை, ஆணையம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், 30.80 லட்சம் ரூபாய்க்குள் செலவிட வேண்டும் என, தேர்தல் ஆணையம் உச்சவரம்பு வெளியிட்டிருக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு முன் வரை, மூன்று முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய
 தப்புக்கணக்கு! வேட்பாளர்கள் போட முடியாது .... அனைத்துக்கும் தொகை நிர்ணயம்

கோவை : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களுக்கு, எவ்வளவு தொகை குறிப்பிட வேண்டும் என்பதை, ஆணையம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், 30.80 லட்சம் ரூபாய்க்குள் செலவிட வேண்டும் என, தேர்தல் ஆணையம் உச்சவரம்பு வெளியிட்டிருக்கிறது.

ஓட்டுப்பதிவுக்கு முன் வரை, மூன்று முறை செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.தேர்தல் செலவுகளை கணக்கு பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். செலவின பார்வையாளர் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர், அக்கணக்குகளை ஆய்வு செய்வார். ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்த நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் முழு செலவு கணக்கையும் பார்வையாளரிடம் சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களில், ஒவ்வொரு பொருளுக்குமான தொகையையும், ஆணையமே பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அத்தொகையையே குறிப்பிட வேண்டும். டீ ரூ.10, காபி ரூ.20, மோர் ரூ.10, லெமன் ஜூஸ் ரூ.20, ரோஸ் மில்க் ரூ.30, தண்ணீர் பாட்டில் ரூ.20 என குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், ஓட்டல்களில் கூட்டம் நடத்தி, உணவு வழங்கும்போது, 'ஏ', 'பி', 'சி' என, தரம் வாரியாக பிரித்து, தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொண்டர்களை அழைத்து வர பயன்படுத்தும், வாகனங்களுக்கான கட்டணம் மற்றும் டிரைவர்களுக்கான பேட்டாவாக, எவ்வளவு தொகை எழுத வேண்டும் என்பதையும், தேர்தல் ஆணையமே தெளிவுபடுத்தியுள்ளது.

பலுான் பறக்க விட்டால் ரூ.40 ஆயிரம், வி.ஐ.பி., சேர் வாடகை ரூ.200, பிட் நோட்டீஸ் (1,000 எண்ணிக்கை) ரூ.900, போஸ்டர் (30க்கு 40 இன்ச் - 100 எண்ணிக்கை) ரூ.1,200, சாமியானா பந்தலுக்கு சதுரடிக்கு ரூ.5, ஸ்டீல் பந்தலாக இருப்பின், ரூ.8 வீதம் கணக்கிட்டு, செலவு தொகை எழுத வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் செலவின கணக்கு சமர்ப்பிப்பது தொடர்பாக, வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்தால் 'பத்திக்கிரும்' கணக்கு!ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தால்- ரூ.500, அஞ்சாயிரம் வாலா ரூ.1,500, பத்தாயிரம் வாலா ரூ.3,000, ராக்கெட் பாக்ஸ் (30 எண்ணிக்கை) ரூ.450, டபுள் சவுண்ட் பாக்ஸ் ரூ.400, கூட்டம் நடத்தும் திருமண மண்டப வாடகை - 450 இருக்கை வசதி ரூ.35 ஆயிரம், 650 இருக்கை வசதி ரூ.40 ஆயிரம், 900 இருக்கை வசதி - ரூ.50 ஆயிரம் என வாடகை எழுத வேண்டும்.

தாரை தப்பட்டை அடிப்பதற்கு (8 நபர்கள்) ரூ.7,500, பேண்ட் அடித்தால் (8 நபர்கள்) ரூ.6,000, ஆர்க்கெஸ்ட்ரா ரூ.15 ஆயிரம், ஆடல் பாடல் ரூ.16 ஆயிரம், மேடை நாடகம் ரூ.8,000, கும்பம் எடுப்பதற்கு ரூ.100 என, தேர்தல் செலவு கணக்கு எழுத, ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. உணவுக்கும் கணக்கு!மட்டன் பிரியாணி - ரூ.150சிக்கன் பிரியாணி - ரூ.125மஷ்ரூம் பிரியாணி - ரூ.80வெஜிடபிள் பிரியாணி - ரூ.65அசைவ சாப்பாடு - ரூ.100சைவ சாப்பாடு - ரூ.75பொட்டல சாப்பாடு - ரூ.40

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X