விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி யாருக்கு? அதிமுக -திமுக கடும் போட்டி!

Added : மார் 25, 2021 | |
Advertisement
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது, 1951ல் உருவான விக்கிரவாண்டி தொகுதி, மறுசீரமைப்புகளில், 1957ல் வளவனுார் தொகுதியாகவும், 1977ல் கண்டமங்கலம் தொகுதியாகவும் மாறியது. கடந்த 2008ல் நடந்த தொகுதி மறு சீரமைப்பில், 51 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி உதயமானது.விக்கிரவாண்டி தொகுதி, விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள், காணை ஒன்றியத்தில் 45
 விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி யாருக்கு? அதிமுக -திமுக கடும் போட்டி!

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது, 1951ல் உருவான விக்கிரவாண்டி தொகுதி, மறுசீரமைப்புகளில், 1957ல் வளவனுார் தொகுதியாகவும், 1977ல் கண்டமங்கலம் தொகுதியாகவும் மாறியது.

கடந்த 2008ல் நடந்த தொகுதி மறு சீரமைப்பில், 51 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி உதயமானது.விக்கிரவாண்டி தொகுதி, விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள், காணை ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள், கோலியனுார் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியது.தொகுதியில் ஒரு சர்க்கரை ஆலை, சாராய ஆலை, மினி மின் உற்பத்தி நிலையம், ஒரு நுாற்பாலை, மார்டன் ரைஸ் மில்கள், முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. பிரதான தொழில் விவசாயம், நெசவு. தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். தொகுதியில் நீண்டகால பிரச்னையாக சிப்காட் தொழிற்பேட்டை இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அரசு மகளிர் கல்லுாரி, விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை முனையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க மேம்பாலம் கட்டும் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. கடந்த 1951ம் ஆண்டு முதல் பொது தேர்தலிருந்து இம் மூன்று தொகுதிகளிலும் சேர்த்து அ.தி.மு.க., 6 முறையும், தி.மு.க., 7 முறையும், உழவர் உழைப்பாளர் கட்சி, காங்., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., தலா 1 முறை வெற்றி பெற்று தி.மு.க., வும், அ.தி.மு.க.,வும் சமபலத்தில் உள்ளது.கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., ராதாமணி 2019ம் ஆண்டு இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். தி.மு.க., கூட்டணியில் 2019 இடைத்தேர்தலில் களம் கண்டு தோல்வியடைந்த தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி, அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார், நாம் தமிழர் கட்சி ஷீபா ஆஸ்மி, ஐ.ஜே.கே. செந்தில் உள்ளிட்ட 14 பேர் களத்தில் உள்ளனர்தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., என மும்முனை போட்டி நிலவுகிறது.அ.தி.மு.க., இடைத்தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணி கட்சியான பா.ம.க., வுடன் களம் காணுகிறது. கடந்த 2016 தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு 41,428 ஓட்டுகள் பெற்றது. இது இடைத்தேர்தலின் போது வெற்றிக்கு பலமாகியது. இடைத்தேர்தலின் போது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அறிவிப்பும் அ.தி.மு.க.,விற்கு பலம் கூட்டுகிறது. இடைத்தேர்தலில் விட்ட தொகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, இடைத்தேர்தலில் களமிறக்கப்பட்ட புகழேந்தியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மீது தொகுதியில் அனுதாப அலை வீசுகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி களம் இறங்கி வெற்றி பெற வேண்டும் என கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.கூட்டணி கட்சியில் வி.சி.க., காங்., மா.கம்யூ., இந்திய கம்யூ.,கட்சிகள் களம் இறங்கி பணி செய்து வருகின்றன. தேர்தல் அறிக்கையில் கலப்பு திருமணம் செய்தால் நிதி உதவி என்கிற அறிக்கை பெரும்பான்மை சமுதாயத்தினரை சிந்திக்க வைத்துள்ளது. இது ஓட்டு வங்கிக்கு சரிவை தரக்கூடியதாகும்.கடந்த 2016 தேர்தலில் 9,981 ஓட்டுகளை பெற்ற தே.மு.தி.க., - அ.ம.மு.க., கூட்டணியால் அ.தி.மு.க., விற்கு ஓட்டுகள் பிரிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் புதுமுகம் என்றாலும் தே.மு.தி.க., அ.ம.மு.க., கூட்டணி கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகின்றனர்.இழுபறிதொகுதியின் வெற்றி அமைச்சர் சண்முகத்திற்கா? அல்லது முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கா என இருவரும் களம் இறங்கி தேர்தல் பணி ஆற்றி வருகின்றனர். தற்போதைய நிலையில் தொகுதியில் அ.தி.மு.க., -தி.மு.க., வேட்பாளர்கள் சம பலத்தில் உள்ளதால், வெற்றி வாய்ப்பு இரு கட்சிகளுக்கும் இழு பறியாகவே இருக்கும்.விக்கிரவாண்டி தொகுதிமொத்த வாக்காளர்கள் 2,33,901ஆண்கள் 1,15,608பெண்கள் 1,18,268மூன்றாம் பாலினம் 25மக்கள் சதவிகிதம்வன்னியர் 40ஆதி திராவிடர் 30முதலியார் 10முஸ்லிம் 8மற்றவர்கள் 12 2016 சட்டசபை தேர்தல்தி.மு.க., ராதாமணி 63,757அ.தி.மு.க., வேலு 56,845ஓட்டு வித்தியாசம் 6,912ஓட்டுகள் சதவீதம் தி.மு.க., 35.69அ.தி.மு.க., 31.82பா.ம.க., 23.19மா.கம்யூ., 5.592019 இடைத் தேர்தல்அ.தி.மு.க., முத்தமிழ்செல்வன் 1,13,766தி.மு.க., புகழேந்தி 68,842ஓட்டு வித்தியாசம் 44,924ஓட்டுகள் சதவீதம்அ.தி.மு.க., 60.79தி.மு.க., 36.78

 -நமது சிறப்பு நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X