தமிழ்நாடு

முதல்வர் பிரசார பயணத்தில் கடைசியாக சேர்ந்த 'வடக்கு'

Added : மார் 25, 2021
Share
Advertisement
மதுரை : தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 25) மதுரையில் அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களைஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.அவரது பிரசாரம் கிழக்கு தொகுதி துவங்கி மேலுார், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மேற்கு, மத்தி மற்றும் தெற்கு தொகுதிகளில் முடிவதாக இருந்தது. இதில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., வேட்பாளர் சரவணன்

மதுரை : தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 25) மதுரையில் அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களைஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அவரது பிரசாரம் கிழக்கு தொகுதி துவங்கி மேலுார், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மேற்கு, மத்தி மற்றும் தெற்கு தொகுதிகளில் முடிவதாக இருந்தது. இதில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ., வேட்பாளர் சரவணன் போட்டியிடும் வடக்கு தொகுதி இடம் பெறவில்லை.

வடக்கு தொகுதி பா.ஜ., பொறுப்பாளர்கள் கூறியதாவது: மத்திய தொகுதி வேட்பாளரை ஆதரித்து திருமலை நாயக்கர் மகால் பகுதியில் முதல்வர்பேசும்போது வடக்கு வேட்பாளரையும் வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அ.தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கட்சி தலைமைக்கு தெரிவித்தோம். தலைமை, அ.தி.மு.க.,வுடன் பேசிய நிலையில் மாலையில் பயண விவரத்தில் வடக்கும் இணைக்கப்பட்டது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X