கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிவிட்ட பஜ்ரங்தள் - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 25, 2021 | Added : மார் 25, 2021 | கருத்துகள் (92)
Share
Advertisement
ஜான்சி : பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒரு குழு, கன்னியாஸ்திரிகள் சிலரை அவமானப்படுத்தி ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கடந்த 19ம் தேதி கேரள தேவாலயத்தின் கீழ் உள்ள கான்வென்ட்டை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அங்கு பயிற்சி பெறும் இரண்டு பெண்கள் டில்லியில் இருந்து ஒடிசாவின்
Nuns, BajrangDal,

ஜான்சி : பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஒரு குழு, கன்னியாஸ்திரிகள் சிலரை அவமானப்படுத்தி ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கடந்த 19ம் தேதி கேரள தேவாலயத்தின் கீழ் உள்ள கான்வென்ட்டை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அங்கு பயிற்சி பெறும் இரண்டு பெண்கள் டில்லியில் இருந்து ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு உத்கல் எக்ஸ்பிரஸில் சென்றனர். கடந்த வெள்ளியன்று ஜான்ஸி ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த ரயிலில் பயணித்த பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிலர், ‛‛அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்ய அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் அவமானப்படுத்தியதாகவும், ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதுப்பற்றி விசாரித்த ரயில்வே போலீசார், கன்னியாஸ்திரிகள் மீது எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்து, அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.


latest tamil newsஇந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. அதோடு கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நமது தேசத்தின் நன்மதிப்பையும், பாரம்பரியமான மத சகிப்புத்தன்மை, வழிபாடு ஆகியவற்றின் மதிப்பையும் கெடுத்துவிடும். இதற்கு உச்சபட்ச கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அமித் ஷா, ‛‛இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் விரைவில் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என கேரள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்'' என்றார்.
இந்த சம்பவம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. #Nuns, #BajrangDal உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவும் ஒரு வகையிலான மதத்தின் பேரிலான வன்முறை சம்பவம் தான். இதுபோன்று செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் யார்வேண்டுமானாலும் எவர்மீதும் தங்கள் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலை வந்தால் நாடு என்னாகும்? ஒரு பயணி தான் செல்லும் ஊர் சென்றடைவது நிச்சயமில்லை என்ற நிலைவந்தால் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியா நடை பெறுகிறது? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகி போனதே
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
26-மார்-202108:58:55 IST Report Abuse
Raj மனிதரை மனிதனாய் பாருங்கள்.
Rate this:
Vaanambaadi - Koodaloor,இந்தியா
26-மார்-202110:40:37 IST Report Abuse
Vaanambaadiமதம் மாறுறதுக்கு முன்னாடி, தனது கடவுள், கலை , கலாச்சாரம், மொழி, இனம் , தொழில், குணம், அறிவு எல்லாம் மாறு, மேன்னு கவலைப்படாது மாறிக்கிட்டு இப்போ வந்து மனிதனாய் பார்க்கணுமாம்....போவியா......
Rate this:
வெற்றி வேல் - -மதராஸ்:-),,இந்தியா
26-மார்-202110:50:17 IST Report Abuse
வெற்றி வேல்மூர்க்கனை மூர்க்கனாகத்தான் பார்ப்பார்கள்..மனிதனாக மாறு பாய்...
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
26-மார்-202108:40:10 IST Report Abuse
vivek c mani ஹிந்து மதத்திற்கு எதிரான செயல்களை , கொடூரங்களை, கொலைகளை, கோவில்கள் அழிக்கப்படுவதும், மற்றும் ஹிந்துக்களின் துன்பத்தை பற்றிய செய்தியை வெளிவராமல் அமுக்கிவிடுகிறார்கள். இல்லையேல் இம்மாதிரி செய்திகளை போட்டோம் என கூற மேலெழுந்த வாரியாக கூறிவிட்டு விட்டுவிடுகிறார்கள். கிறிஸ்துவர்களை பற்றியோ முஸ்லிம்களை பற்றியோ கூறுவது போல் அரைத்த மாவை புழுத்து போகும் வரை அரைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஹிந்துக்களின் அவல நிலைகள் கூறப்பட்டு ட்ரெண்ட் ஆக வேண்டியது அவசியம். இல்லையெனில் சிறுபான்மை மக்கள் ஹிந்துக்களை ஒன்றும் செய்வதில்லை உத்தமர்கள் எனும் இவர்கள் ஆடும் நாடகத்திற்கு ஒத்து ஊதுவது போலாகும். ஹிந்துக்கள் படும் துன்பத்தையும் ட்ரெண்ட் ஆக்குவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X