ஜோ பைடனின் துணை செயலாளராக திருநங்கை நியமனம்; குவியும் பாராட்டு

Updated : மார் 25, 2021 | Added : மார் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் சுகாதாரத்துறை துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார்.அமெரிக்க அரசியல்
ஜோபைடன், திருநங்கை, நியமனம், அமெரிக்கா, துணை செயலர்

வாஷிங்டன்: அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கியப் பதவி ஒன்றை வழங்கியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் சுகாதாரத்துறை துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரேச்சல், முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் சுகாதாரத் துறை செயலாளராகப் பதவி வகித்து குறிப்பிடத்தக்கது.


latest tamil news



ரேச்சல் ஜோ பைடனின் ஆலோசகராக நியமிக்கப்பட நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவர்களில் 48 பேர் ரேச்சல் ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருநங்கைகள் அரசியல், சினிமா, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் சாதிக்கத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு மிக முக்கிய பதவி வழங்கியது பல்வேறு நாடுகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.subramanian - madurai,இந்தியா
26-மார்-202112:07:04 IST Report Abuse
v.subramanian கேட்க சந்தோசமாக இருக்கு திருநங்கைகள் தங்களின் தாழ்வு மனப்பான்மையைவிட்டு படித்து முன்னுக்குவரவேண்டும் அரசு இவர்களுக்கு எல்லா உதவியும் செய்யவேண்டும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-மார்-202119:24:48 IST Report Abuse
Ramesh Sargam பய்டனின் முடிவு வரவேற்க தக்க ஒரு நல்ல முடிவு. சுகாதாரத்துறை துணை செயலாளர் ரேச்சல் லெவின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-மார்-202119:14:43 IST Report Abuse
தமிழவேல் இதுபோல நம்ம பிரதமரும் நியமிச்சிக்கணும்..
Rate this:
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
25-மார்-202122:50:01 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்ரொம்பவே ஆர்வமா இருக்கீங்க போல (என்ன அனுபவமோ?) உங்க டேஸ்ட் நம்ம பிரதமருக்கும் இருந்தா நடக்கும்...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
26-மார்-202105:22:03 IST Report Abuse
Sanny நம்ம பிரதமர் நியமித்தாலும், அதை தடுக்க ஒரு கூட்டமும், திருநங்கைகள் தகாதவேலை செய்பவங்க, திருடுபவங்க என்று சொல்லி அவங்களை ஒதுக்கிவைக்க ஒரு வாசகர் கூட்டமும் இந்தப்பகுதியில் இருக்கிறாங்க. பிறகு எப்படி?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X