ரூ.4 லட்சம் லஞ்சம்: பெண் அதிகாரி கைது

Updated : மார் 26, 2021 | Added : மார் 25, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, மோசடிக்கு உதவிய, பி.எப்., அமலாக்கப் பிரிவு பெண் அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட - பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. இங்கு, லஞ்சப் பணம் கைமாறுவதாக வந்த தகவல் அடிப்படையில், சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று(மார்ச் 25)
லஞ்சம், பிஎப், வருங்கால வைப்பு நிதி, அதிகாரி, கைது

திருப்பூர்: திருப்பூரில், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, மோசடிக்கு உதவிய, பி.எப்., அமலாக்கப் பிரிவு பெண் அதிகாரியை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட - பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. இங்கு, லஞ்சப் பணம் கைமாறுவதாக வந்த தகவல் அடிப்படையில், சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று(மார்ச் 25) அதிரடி சோதனை நடத்தினர். அமலாக்கப் பிரிவு அதிகாரி லோகநாயகி, 41, அறையில் இருந்து வெளியேறிய இருவரை பிடித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, 'கிடுக்கிப்பிடி' விசாரணை செய்ததில், லோகநாயகிக்கு, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கியதை ஒப்புக் கொண்டனர்.சி.பி.ஐ., அதிகாரிகள், லோகநாயகி அறையில் உள்ள மேஜையில் இருந்து, 4 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து, அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் அறைகளிலும் சோதனை நடத்தினர்.


latest tamil news
பின்னணி என்ன?


சென்னையை தலைமையிடமாக கொண்டு, கோவை, திருப்பூர் பகுதிகளில் இயங்கும் ஒரு நிறுவனம், தொழிலாளர்களின் பி.எப்., தொகையை முறையாக செலுத்தவில்லை. பல லட்சம் ரூபாய் பி.எப்., நிலுவைத் தொகையை செலுத்தாமல் தவிர்க்க, பெண் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியது விசாரணையில் தெரிந்தது.லஞ்சம் வாங்கிய லோகநாயகி மற்றும் லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ், ரமேஷ்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


latest tamil news


கோவையில் உள்ள லோகநாயகி வீடு மற்றும் தனியார் நிறுவனத்தின் கோவை, திருப்பூர், சென்னையில் உள்ள கிளைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், கணக்கில் வராத, 6.10 லட்சம் ரூபாய் மற்றும் பி.எப்., அலுவலக விதிமீறலுக்காக தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் சிக்கின.

இது தொடர்பான சோதனையில், மற்றொரு அதிகாரி அறையில் இருந்து, 3 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த அதிரடியால், பி.எப்., அலுவலக அதிகாரிகள் கலக்கம் அடைந்துஉள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SimplySwamy - Coimbatore ,இந்தியா
01-ஏப்-202111:12:23 IST Report Abuse
SimplySwamy I am very surprised and shocked that CBI and government are not aware of what is going on with PF and ESI authorities, for the last three decades...Technology improvements like Online payments and withdrawals have not fully resolved these corrupt practices...Only stringent measures including cessation of properties pension benefits, jail sentence and dismissal from services may curtail these disceases....the immediate family members of such corrupt officers and staff should be debarred from any type of employment in any government jobs and concessions...Pain has to be made very high to detest such indulgence....SimplySwamy
Rate this:
Cancel
vijay129 - chennai,இந்தியா
31-மார்-202106:55:54 IST Report Abuse
vijay129 ஆபிசில் வைத்தா லஞ்சம் வாங்குவார்கள் , ஓடு காரில் வைத்து யார் மூலமாவது வாங்க வேண்டும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-மார்-202105:46:28 IST Report Abuse
meenakshisundaram ஐயா தாசில்தார் அலுவலகங்க லில் (குறிப்பாக சென்னை) லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தாமாக நேராக பணம் பெறுவதில்லை -அருகே நிற்கும் கீழ் நிலை பெண் ஊழியரிடம் கொடுக்க சொல்கிறார்கள் -இது கண் கூடு .இவ்வாறு பெட்ரா லஞ்சப்பணத்திலே இவர்களின் காசு பெறாத வாரிசுகள் மெடிக்கல் சீட்டுகளை பெற உபயோகப்படுத்து கிறார்கள் .ஆண்களில் சிலர் அபார்ட்மெண்ட் கலீல் முதலீடு செய்வது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X