அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு: பா.ஜ.,வுக்கு ஸ்டாலின் 'அட்வைஸ்'

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (114)
Share
Advertisement
திருவண்ணாமலை:''தமிழக மக்கள், அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு என தெளிவு கண்டவர்கள். இதை, பா.ஜ., புரிந்து கொள்ள, 100 ஆண்டுகள் ஆகும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். திருவண்ணாமலையில், நேற்று ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:போளூர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அயோக்கியத்தனம், ஊழல் நிறைந்தவர் என, ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்.
அரசியல் ,ஆன்மிகம், பா.ஜ.,, ஸ்டாலின் ,அட்வைஸ்,

திருவண்ணாமலை:''தமிழக மக்கள், அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு என தெளிவு கண்டவர்கள். இதை, பா.ஜ., புரிந்து கொள்ள, 100 ஆண்டுகள் ஆகும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில், நேற்று ஓட்டு சேகரித்து அவர் பேசியதாவது:போளூர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அயோக்கியத்தனம், ஊழல் நிறைந்தவர் என, ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஜெயலலிதா ஒதுக்கி வைத்தது போல், அவரை மக்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்.தி.மு.க., ஹிந்துக்களுக்கு விரோதி என பொய் பிரசாரம் செய்கின்றனர். யாருடைய நம்பிக்கைக்கும் எதிராக, தி.மு.க., செயல்படாது. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பளித்து ஆட்சி நடத்தும். தமிழக மக்கள், அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என தெளிவு கண்டவர்கள். இதை, பா.ஜ., புரிந்து கொள்ள, 100 ஆண்டுகள் ஆகும்.


latest tamil news



பா.ஜ., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. அ.தி.மு.க.,வும் வெற்றி பெறக்கூடாது. ஒருவர் ஜெயிச்சா கூட, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பாங்க. உதாரணமாக, அ.தி.மு.க., சார்பில், தேனியில் ஜெயித்துள்ள ஒரே எம்.பி.,யான, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத், அவரது லெட்டர் பேடில், மோடி படத்தை போட்டுள்ளார்.தமிழகத்தில் இருந்து, தி.மு.க., சொன்னதை டில்லி கேட்டது. இன்றைக்கு டில்லி சொல்வதை தமிழகம் கேட்கிறது. நாம் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.


'நினைத்தாலே முக்தி'


ஸ்டாலின் மேலும் பேசியதாவது:நினைத்தாலே முக்தி தரும் தலத்திற்கு, ஸ்டாலின் தேடி வந்திருக்கிறான். திருவண்ணாமலை ஆன்மிக தலம், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. ஆன்மிக சுற்றுலா செல்ல ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.ஜாதி, சமயம், நல்லிணக்கத்திற்காக, அருட்பிரகாச வள்ளலார் பெயரில், வடலுாரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப்பாதை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு, இரு பக்கமும் பசுமையான சூழல் உருவாக்கப்படும். தேரோடும் வீதி கான்கிரீட் சாலையாக மாற்றப்படும். மாட வீதிகளில் புதை வட மின் கம்பி அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravan - bangaloru,சவுதி அரேபியா
31-மார்-202115:47:44 IST Report Abuse
saravan ஏ பல தெருக்கூத்தை பத்திட்டுதான் வந்திருக்கோம்...எத்தனை கொரங்கு குட்டிக்கரணம் போட்டிருக்கு காசுக்காக... கறுப்பர் கூட்டம்... தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு... தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அச்சப் படும்.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
26-மார்-202118:15:20 IST Report Abuse
S Bala அரசியலும் ஆன்மீகமும் வெவ்வேறுதான். பிறகு என்னத்துக்கு 200 கோடி தேவாலயம் புதுப்பிக்கவும் 2000 கோடி கோவில்கள் புனரமைக்கவும் வாக்குறுதி?
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
26-மார்-202118:01:45 IST Report Abuse
Desi துரைமுருகன் வேறு D.துரைமுருகன் வேறு...அதானே சுடலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X