பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் பற்றி திருமா சர்ச்சை பேச்சு: நிஜம் என்ன?

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (123)
Share
Advertisement
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மீண்டும், திருவள்ளுவர் குறித்து சர்ச்சை கிளப்பி உள்ளார்.திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஒரு அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக வள்ளுவருக்கு பூணுால் அணிவித்தார். அதை பார்த்த கருணாநிதி, 'திருவள்ளுவரை, ஒரு ஜாதிக்குள் அடைக்கக் கூடாது; அவர் எல்லோருக்கும்
 திருவள்ளுவர், திருமா, சர்ச்சை பேச்சு

தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மீண்டும், திருவள்ளுவர் குறித்து சர்ச்சை கிளப்பி உள்ளார்.

திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஒரு அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக வள்ளுவருக்கு பூணுால் அணிவித்தார். அதை பார்த்த கருணாநிதி, 'திருவள்ளுவரை, ஒரு ஜாதிக்குள் அடைக்கக் கூடாது; அவர் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் உடலில் உள்ள பூணுாலை கழற்றி எறியுங்கள் என சொல்லி, பூணுாலை அறுத்து எரிந்தார்' என்று பேசியுள்ளார்.


latest tamil newsவேணுகோபால் சர்மாவின் மகன் விநாயக் வே ஸ்ரீராமிடம் கேட்டோம்.'அப்பா, ஒரே நாளில் வள்ளுவர் படத்தை வரைந்து விடவில்லை. 12 ஆண்டுகள் தீவிர முயற்சி எடுத்து, வரைந்து வரைந்து மேம்படுத்திதான், தற்போது நாமெல்லாம் பார்த்து போற்றும் வள்ளுவர் உருவத்தைக் கொண்டு வந்தார். 2,000 ஆண்டுகளாக வள்ளுவருக்கு இல்லாதிருந்த உருவம் கிடைத்ததும், முதல் ஆளாக அதை பார்த்து, வியந்து அப்பாவை பாராட்டினார் பாரதிதாசன்.

வள்ளுவர் கழுத்தில் கிடந்த பருத்தி நுாலால் வேயப்பட்ட சரடைப் பார்த்தார். 'வள்ளுவனே ஒரு இலக்கணம்; அவனுக்கு எதுக்கு புது இலக்கணம். அந்த நுால் சரடை அகற்றி விடுங்கள்' என, அப்பாவிடம் சொன்னார்.கூடவே, பிற்காலத்தில் வள்ளுவனை, ஒரு ஜாதிய அடையாளத்துக்குள் அடைத்து விமர்சிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கையாக சொன்னார்.

என்ன ஒரு தீர்க்கதரிசி பாருங்கள்.ஆனால், பாரதிதாசன் சொன்னதை அப்பா ஏற்கவில்லை. சரியென, பாரதிதாசன் சென்று விட்டார். பின்னர் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 'ஓவியரான உங்களுக்கு ஓவியம் தான் தெரியும்; சமூகம் தெரியாது. அதனால், என் வேண்டுகோளாக ஏற்று, திருவள்ளுவர் கழுத்தில் இருக்கும் பருத்தி நுால் சரடை மட்டும் நீக்கி விடவும்' என, அதில் எழுதி இருந்தார்.


ஒரு மாபெரும் கவிஞன், உணர்ந்து சொல்லும் விஷயத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவே திருவள்ளுவர் கழுத்தில் இருந்த பருத்தி நுால் சரடை, அப்பா நீக்கினார். இது நடந்தது, 1959ல்.பிறகு தான், அண்ணாதுரை, காமராஜர், கக்கன், ஜீவா, கண்ணதாசன் ஆகியோர் திருவள்ளுவர் படத்தை பார்த்து, அப்பாவை பாராட்டினர். அதற்கான ஒலி நாடா எல்லாம் என்னிடம் இருக்கிறது.

பின், 1964ல் முதல்வராக இருந்த பக்தவத்சலம், அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை சட்டசபையில் திறந்து வைத்தார். அதன்பின், 1967ல், முதல்வரான அண்ணாதுரை, அரசு அலுவலகங்களில் அப்பா வரைந்த வள்ளுவர் ஓவியத்தை வைக்க அரசாணை வெளியிட்டார்.

வள்ளுவர், 1,330 குறள்களில் உலகையும், மனிதர்களையும் குறித்து சொன்ன விஷயங்களில் இருந்து தான், வள்ளுவர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற வடிவமே அப்பாவுக்கு உருவானது. அதன்படி தான் ஜடாமுடி, தாடி, நீள நெற்றி, அமர்ந்திருக்கும் நிலை என்பதையெல்லாம் ஓவியத்தில் கொண்டு வந்தார் அப்பா.பூணுால் என்பது கழுத்தில் அணிவது அல்ல. உடலின் குறுக்கே அணிவார்கள்.

உண்மை இப்படி இருக்கும் போது, சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இந்த விஷயத்தில் இழுத்து வந்து திருமாவளவன் ஏன் பேசுகிறார் என தெரியவில்லை.இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னபோது, அவருக்கு நான் இந்த விபரத்தை சொன்னேன். அவர் உடனே புரிந்து கொண்டு, வருத்தம் தெரிவித்தார்.இப்படி சொன்னார் ஓவியர் சர்மாவின் மகன்.

வரலாற்று ஆய்வாளர், சாமி தியாகராஜன் கூறுகிறார்: பக்தவத்சலம் காலத்தில், வள்ளுவர் படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது. பின், 1966ல் மயிலாப்பூர் சிவசாமி சாலையில், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அந்த சிலை, வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த சிலையில், பூணுால் இல்லை. எனவே, வள்ளுவருக்கும், பூணுாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமாவளவன் முழுமையான வரலாறு தெரிந்து கொண்டு பேசினால் நல்லது.
இவ்வாறு ஆய்வாளர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V gururajan - Chennai,இந்தியா
26-மார்-202123:34:14 IST Report Abuse
V gururajan தை ஒன்றாம் தேதியை வள்ளுவன் பிறந்த நாளை அல்லவா கொண்ட வேண்டும். .
Rate this:
Cancel
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
26-மார்-202120:53:56 IST Report Abuse
T.Senthilsigamani திருவள்ளுவர் பற்றி திருமா சர்ச்சை பேச்சு: நிஜம் என்ன?.மக்களுக்கு உண்மையான செய்திகளை மட்டும் நாங்கள் கொண்டுசெல்வோம் என்று மார் தட்டி சொல்லும் நடுநிலை வெகுஜன சமூக ஊடகங்கள் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரா ?
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
26-மார்-202118:54:30 IST Report Abuse
M.COM.N.K.K. புனிதமான மதத்தை இழிவாக பேசுபவர்கள் மனிதத்தன்மை இல்லாதவர்கள் ஆவார்கள். உண்மையான வரலாறு தெரியாதவர்களே இப்படி தரம் தாழ்ந்து பேசுவார்கள் அவர்களை எந்த காலத்திலும் திருத்தவே முடியாது திருத்தவும் மாட்டார்கள் அவர்களுக்கு இறைவன்தான் தண்டனை கொடுக்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X