பொது செய்தி

இந்தியா

திருமலை தேவஸ்தானத்திற்கு ஜி.எஸ்.டி., விலக்கு இல்லை

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
திருப்பதி:''திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க முடியாது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது.முதலீடுஇதன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய்
GST, TTD, Tirumala Tirupati Devasthanams, Nirmala, Nirmala Sitharaman, Goods and Services Tax,ஜி.எஸ்.டி

திருப்பதி:''திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க முடியாது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பக்தர்களின் உண்டியல் காணிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், வங்கியில் முதலீடு செய்கிறது.


முதலீடு


இதன் வாயிலாக கிடைக்கும் வட்டி வருவாய் உள்ளிட்டவற்றை கொண்டு, தேவஸ்தான பணிகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. உண்டியலில் பெறப்படும் தங்கம், நன்கொடையாக வழங்கப்படும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை நிரந்தர வைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் கிடைக்கும் வருவாயும், இதில் உள்ளடக்கியது.

இவற்றுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு, தலா, ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. என்றாலும், அந்த லட்டு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களுக்கும், அறைகளின் வாடகை கட்டணத்தின் மீதும், ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வருகிறது.

அதனால், ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி.,யாக, தேவஸ்தானம் சார்பில் செலுத்தப் பட்டு வருகிறது. 'திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு தார்மீக நிறுவனம் என்பதால், தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தேவஸ்தான அதிகாரிகளும், ஆந்திர அரசும், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தன.


latest tamil news
வழங்க முடியாது


இந்நிலையில், ஆந்திர மாநில எம்.பி., விஜயசாரதி ரெட்டி, சமீபத்தில் பார்லிமென்டில் பேசுகையில், 'நாட்டில் உள்ள கோவில்களில் மிக முக்கிய கோவிலாக ஏழுமலையான் கோவில் கருதப்படுகிறது. 'எனவே, அதை நிர்வகிக்கும் தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என்றார்.

அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''நாட்டில் முக்கிய கோவில்கள் ஏராளமாக உள்ளன. ''அவற்றிற்கெல்லாம் வழங்கப்படாத, ஜி.எஸ்.டி., விலக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மட்டும் வழங்க முடியாது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-மார்-202121:52:03 IST Report Abuse
தமிழவேல் """ஒரு வரம்பு நிர்ணயித்து""", அதை தாண்டும் அனைத்து (வர்கத்தினரின்) ஆலையங்களுக்கும், அனைத்து வருமானங்களுக்கும் வரி விதிப்பதில் தவறில்லை.
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
26-மார்-202120:31:41 IST Report Abuse
r ganesan அந்த அம்மா இருக்கும் நிலையில் இது தான் சரியான முடிவு
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
26-மார்-202119:42:45 IST Report Abuse
Rajagopal தேவாலயங்கள், மசூதிகள் உண்டாக்கும் பணத்திற்கு இந்த வரி உண்டா? இல்லையென்றால் அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள். இந்து சார்பான கட்சியாக இருந்துகொண்டு இந்துக்களின் இதயம் போல இருக்கும் கோயில்களை, வெள்ளைக்காரன்/காங்கிரகாரன் போட்ட சட்டத்தை அகற்றாமல் ஆறு வருடங்களாக ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். முத்தலாக் சட்டம் கொண்டுவருவதில் இருந்த அவசரம் இந்துக்களின் வேர்களை பலமாக்கும் முயற்சியில் சுத்தமாக இல்லை. இந்துக்களுக்கென்று ஒரு தனி கட்சி இனிமேல் தேவை. வேறு வழியில்லை. நாம் அந்த வழியில் தள்ளப்பட்டுள்ளோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X