புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம்: பா.ஜ., தேர்தல் அறிக்கை

Updated : மார் 26, 2021 | Added : மார் 26, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ‛உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி' என்ற
bjp, pondycherry, election, manifesto, Puducherry Assembly Elections, Puducherry, புதுச்சேரி, சட்டசபை தேர்தல், பாஜ, பா.ஜ., தேர்தல் அறிக்கை, நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர், நிதியமைச்சர், Nirmala, Nirmala sitharaman, Finance Minister,

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ‛உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி' என்ற தலைப்பில் 50 ஆயிரம் பேரிடம் கருத்துகள்கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உளளது. 12 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
*விண்ணப்பித்த 15 நாட்களில் வீடுகளுக்கு மின் இணைப்பு
*புதுச்சேரியில் பெண்களுக்கு மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசம்
*புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம், கல்வி தேர்வாணையம் அமைக்கப்படும்
*எந்த ஆன்மிக வழிபாட்டு தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது.
*கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்
*கொரோனா பேரிடர் காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி
*மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும்.
*ஒருங்கிணைந்த மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news


பின்னர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், புதுச்சேரியில் 51 சதவீதம் பெண்கள் உள்ளனர். பா.ஜ., தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு , அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பா.ஜ., அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பெண்களுக்கு கல்வி இலவசமா இப்போ இலவசமில்லையா என்ன இது என்ன அரத பழசாச்சே கல்விதந்த காமராசரை நிர்மலாவுக்கு கூட தெரியவில்லையே சொல்றவங்களா இல்லை கேக்கறவங்களா யாரு "புத்திசாலி"?
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
27-மார்-202107:50:01 IST Report Abuse
Ellamman புதுவையில் தேர்தலை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும் உயர்நீதிமன்றம்.... பொபதுமக்களின் தொலைபேசி எங்களை களவாடி அதன் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதித்து யார்???
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
27-மார்-202107:44:45 IST Report Abuse
Raman மூணு வேலை சாப்பாடு இலவசம். போட்டுக்க துணிமணி வருஷத்துக்கு ஆறு செட் இலவசம்.. செருப்பு, சூ வருஷத்துக்கு மூணு செட் இலவசம்.. இன்னும் நிறைய சொல்லலாம். சங்கிகளே உங்க தலைமைக்கு சொல்லுங்க. ஹி ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X