வருமான வரித்துறை சோதனை ஆணையத்தில் தி.மு.க., கோரிக்கை

Updated : மார் 28, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
'தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில், உள் நோக்கத்துடன் கூடிய சோதனைகளை, தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக நடத்துவதை தவிர்க்கும்படி, வருமான வரித் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரித்துறை, சோதனை,  ஆணையம், தி.மு.க., கோரிக்கை

'தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில், உள் நோக்கத்துடன் கூடிய சோதனைகளை, தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக நடத்துவதை தவிர்க்கும்படி, வருமான வரித் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் நேற்று, தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., - டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை சார்பில், சோதனைகள் ஏவி விடப்படுகின்றன.எந்தவொரு புகாரும் அல்லது தேர்தல் அதிகாரி களிடமிருந்து முன்தகவலும் வராத நிலையில், இவ்வாறு சோதனை நடத்துவதன் வாயிலாக, தி.மு.க., வேட்பாளர்கள் மீது களங்கம் விளைவிப்பதோடு, அவர்களது பிரசாரப் பணிகளையும், சில நாட்களாவது முடக்கலாம் என முயற்சி நடந்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் தொடர்வதை, தன்னாட்சி அதிகாரம் ெபற்ற தலைமைத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தால், ஜன நாயகமே வலுவிழந்து விடும். எனவே, தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில், வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் கூடிய சோதனைகளை தவிர்க்கும்படி, வருமான வரித்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-மார்-202114:46:24 IST Report Abuse
Dr. Suriya ஐயோ.. அயய்யோஒ... நாங்கள் திருடி ஊழல் செய்து சேர்த்து வைத்த பணத்தை மக்களுக்கு கொடுப்பத்தை தடுத்து எங்கள் வெற்றியை பாதிப்படைய செய்யும் வகையில் செயல்படுது வருமானவரித்துறை.....டி கே எஸ்ஸு...
Rate this:
Cancel
27-மார்-202114:36:27 IST Report Abuse
தமிழ் அதிமுக பண்ணம்கொடுத்தால் பல்லைக்காட்டிக்கொண்டு வாங்கிக் கொள்ளும் அல்லக்கைஸ் யோக்கியன் மாதிரி திமுகவை திட்டவந்துட்டானுங்க.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
27-மார்-202110:44:14 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மக்களுக்கு காசு குடுத்து ஒட்டு வாங்க எங்களுக்கு அனுமதி கொடுங்க என்று சொல்லுது டீம்கா நல்ல கட்சி வாளுக சொறியார் , வாளுக மஞ்ச துண்டு, வாளுக டுமீல் மக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X