பொது செய்தி

தமிழ்நாடு

'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு

Updated : மார் 27, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (124)
Share
Advertisement
கோவை : தமிழகம் முழுவதும் 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி, 'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கோவை, ஈஷா யோகா மையம் அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'கோவில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை துவக்கி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, ஹிந்து கோவில்களை விடுவிக்கக் கோரி வருகிறார். இதற்கு, அரசியல் கட்சியினர் மற்றும்
கோவில் அடிமை நிறுத்து, Isha, Sadhguru

கோவை : தமிழகம் முழுவதும் 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தி பாடல்கள் பாடி, 'கோவில் அடிமை நிறுத்து' இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கோவை, ஈஷா யோகா மையம் அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'கோவில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை துவக்கி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, ஹிந்து கோவில்களை விடுவிக்கக் கோரி வருகிறார். இதற்கு, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பொதுமக்கள் பக்தி பாடல்களை பாடி, நேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.இவ்வியக்கத்தினர் தஞ்சாவூர் பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், கோவை மருதமலை முருகன் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில், சேலம் பாண்டுரங்கன் கோவில், பவானி சங்கமேஷ்வரர் கோவில், சுசீந்திரம் ஸ்ரீ தானுமலையான் கோவில், சென்னை காரணீஸ்வரர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய 11 பிரசித்தி பெற்ற கோவில்களில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பக்தி பாடல்கள் பாடி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


கோவை மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி கவசம் பாடி ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், ஈஷா ஆதியோகி முன், ஏராளமானோர் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, தஞ்சை பெரிய கோவிலில், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களுடன், உள்ளூர் மக்கள் இணைந்து, நேற்று மாலை, தேவார பாடல்களை பாடி ஆதரவை தெரிவித்தனர். கோவில் முன், நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, 'கோவில் அடிமை நிறுத்து' என்ற பதாகையை ஏந்தி, ஆதரவை பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
28-மார்-202121:39:16 IST Report Abuse
vivek c mani மர்மமென்ன ? விளக்குவீர்களா ?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
28-மார்-202107:36:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி பணம் தண்ணியா செலவழிக்கிறாய்ங்க.. போஸ்டர் செலவே பல கோடி ஆகும் போலிருக்கே.. அப்புறம் கூட்டத்துக்கு பிரயாண செலவு, பொங்கல், சுண்டல்ன்னு.. ஈஷாவுக்குள்ளே போட்டோ எடுக்க அணுமதி கிடையாது, ஆனா அவன் கோவிலுக்குள் பெரும் தொற்று நேரத்தில் அனுமதி இல்லாமல்,கூட்டம் கூட்டி கலாட்டா செய்யிறான்.. கேக்குறதுக்கு எவனும் இல்லையா ??
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
28-மார்-202123:56:04 IST Report Abuse
Aarkayசுடலை பிரச்சாரக்கூட்டத்தில் பிரியாணிக்கு கூடும் டாஸ்மாக் கூட்டம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா ஹவாலா?...
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
27-மார்-202122:20:32 IST Report Abuse
சோணகிரி கோவில் அடிமை நிறுத்து.... கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து மீட்டே தீருவோம்... கோவில்களை அரசு ஒப்படைக்கும்வரை கோவில் உண்டியல்களில் சல்லிக்காசு போடமாட்டோம்...
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
28-மார்-202107:37:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி//கோவில்களை அரசு ஒப்படைக்கும்வரை கோவில் உண்டியல்களில் சல்லிக்காசு போடமாட்டோம்... // ரொம்ப நல்லது .....
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
28-மார்-202123:56:57 IST Report Abuse
Aarkayஒட்டகம் மற்றும் ஹவாலாவின் கருத்து யாருக்கும் இங்கே தேவை இல்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X