அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீமான் கட்சியினர் டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 27, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியினர், ‛‛போதும்_திமுக_அதிமுக'' என்ற ஹேஷ்டாக்கை முன்னெடுத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர். தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் களத்தில் பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக., திமுக., தேசிய மற்றும் மாநில
போதும்_திமுக_அதிமுக, Reject_DMK_ADMK, Seeman, நாம்தமிழர்கட்சி,

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியினர், ‛‛போதும்_திமுக_அதிமுக'' என்ற ஹேஷ்டாக்கை முன்னெடுத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.,6ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் களத்தில் பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளான அதிமுக., திமுக., தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து களமிறங்கி உள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும், நடிகர் சரத்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களம் கண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து இந்தமுறையும் தனித்து களம் கண்டு தனது தனி அடையாளத்தை நிரூபித்து வருகிறார். தமிழக முழுக்க அவர் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.


latest tamil newsடிஜிட்டல் மயமாகி போன இந்த உலகம், தேர்தல் களத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற பல சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பல்வேறு கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். இதனால் தினம் ஒரு ஹேஷ்டாக்கை ஒவ்வொரு கட்சியினர் உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று #போதும்_திமுக_அதிமுக, #Reject_DMK_ADMK என்ற ஹேஷ்டாக்குகளை முன்னெடுத்து டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர். இந்த ஹேஷ்டாக்குகளில் பதிவிடப்பட்ட சில கருத்துங்கள் இங்கே...
* கட்சி பெயரில் கூட தமிழ் என்ற வார்த்தை இல்லை. ஆனால் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்று 50 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி தங்களது வண்டியை ஓட்டுகிறார்கள். #போதும்_திமுக_அதிமுக.
* ஊழல், குடும்ப அரசியல், கனிமவள கொள்ளை, ஹைட்ரோ கார்பன், நீட், காடுகள் அழிப்பு, விவசாயி தற்கொலை, நில அபகரிப்பு, எட்டுவழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, மீனவர் படுகொலை, தமிழர் வேலை பறிப்பு, காவிரி நதிநீர் பிரச்சனை, ஈழப்போர் துரோகம், முல்லைப் பெரியாறு பிரச்னை. அப்பா போதுமடா சாமி. 50 ஆண்டுகள் நீங்கள் ஆட்சி செய்தது. #போதும்_திமுக_அதிமுக.
* பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட தடையின்றி இருந்த காவிரி நீர் உரிமைகளை விட்டுக்கொடுத்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் திராவிடக் கட்சிகள்.


latest tamil news* தேசிய கட்சிகளோடு இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்ற திமுக, அதிமுக, கட்சியினர் அந்த பதவியை எதுவும் செய்யாதவர்கள், ஒருபோதும் தங்களால் சுயாட்சியை நிலைநாட்ட முடியவில்லை.
* எந்த மாநில ஆட்சியாளர்களும் மதுபான ஆலைகளை நடத்துவதில்லை. ஆனால் திமுக., அதிமுக.,வினர் அந்த தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஓட்டளிப்பது மது உற்பத்தியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒப்பாகும்.
* இந்த திராவிடக் கட்சிகள் தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை ஊக்குவித்தன. அவற்றை நிராகரிப்பது தமிழ்நாட்டில் தூய அரசியலின் ஆரம்பம்.
* ஒருவர் திமுகவை நிராகரிக்கும்போது, ​​அது அதிமுக.,வை நிராகரிப்பதற்கு சமம். ஏனெனில் இரண்டு கட்சிகளுக்குமான கொள்ளை, கோட்பாடுகளில் வித்தியாசம் இருக்காது.
* மற்ற தென் மாநிலங்கள் ஆரம்பத்தில் இருந்தே திராவிட சித்தாந்தத்தை நிராகரித்தனர். தங்கள் மக்களுக்காகவும், ஆட்சிக்காகவும் தங்கள் அரசைப் பாதுகாத்தனர். தோல்வியுற்ற திராவிடம், தமிழ்நாட்டை அவர்களின் அரசியல் நலனுக்காக தென்னிந்தியாவாக்கியது. இப்போது, ​​அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்? நீங்கள் எப்படி தமிழர்களைக் கண்டுபிடிப்பீர்கள் என்று.
* திராவிட கொள்கையே இல்லாத கட்சி திமுக. திராவிட கோட்பாடுகளே இல்லாத கட்சி அதிமுக., இவர்கள் நம் மண்ணை ஆள வேண்டுமா சிந்தியுங்கள் மக்களே புறக்கணிப்போம் திமுக, அதிமுகவை....
* பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு தரவே மற்ற கட்சியினர் யோசிக்கும் வேளையில் வேட்பாளர்களையே 50 சதவீதம் ஆண்கள், 50 சதவீதம் பெண்கள் என ஆணுக்கு பெண் சமமாக நடத்தும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். பெண்களை மதிக்கும் கட்சி. வேண்டாம் திமுக., அதிமுக.,
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட வருவதோடு சீமானின் புரட்சிக்கர பேச்சுக்களின் வீடியோக்களையும் பதிவிட்டு டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
28-மார்-202110:03:07 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி சொல்றது போலவே இருக்கே .... நீங்க இரண்டு பெரும் ஒன்னு சேர்ந்திட்டீங்களோ ...
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
28-மார்-202104:13:53 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சரி சரி என்னோட ஓட்டை டிவிட்டரில் போட்டு விடுகிறேன் சைமன் நீ கேரள settangalidathil சொல்லிடு
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
28-மார்-202102:15:17 IST Report Abuse
Nachiar ஈழ விடுதலை பயங்கரவாதிகளின் பின்புலம் மிஷனரிகள். இவனுக்குப் பின்புலம் இந்த பயங்கரவாதிகளும் மிஷனரிகளை தான். புலம்பெயர்ந்த இலங்கை தமிழரிடம் தொடங்கிவிட்டதாம் கப்பம் அரவிடல் இவனுக்கு தேர்தல் செலவுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X