பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட தடை!

Updated : மார் 29, 2021 | Added : மார் 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, ஏப்., 29 வரை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை போட்டுள்ளது. அனைத்து ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அசாம் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்
தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிட  தடை!

சென்னை :தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, ஏப்., 29 வரை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை போட்டுள்ளது. அனைத்து ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அசாம் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று துவங்கியது. ஏப்., 1, 6 தேதிகளில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


பிரசாரம் நிறைவு



தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில், ஒரே கட்டமாக, ஏப்., 6ல் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று துவங்கியது. இம்மாநிலத்தில், ஏப்., 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில், அடுத்தடுத்த கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.ஐந்து மாநிலங்களிலும், ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க, தேர்தல் கமிஷன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில், ஏப்., 4ம் தேதியுடன், பிரசாரம் நிறைவடைய உள்ளது. எனவே, அனைத்து கட்சியினரும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள், இம்மாநிலங்களில் முகாமிட்டு, தங்கள் கட்சி தலைவர்களை ஆதரித்து, பிரசாரம் செய்து வருகின்றனர்.அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், முதல் கட்ட ஓட்டுப்பதிவு, நேற்று நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில், நாளை மாலையுடன், பிரசாரம் நிறைவடைய உள்ளது.ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்துக்கு முன்பாக, பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் கமிஷன் விதிமுறை. அதன்பின், 'டிவி'களில் கூட, பிரசாரம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


பாதிப்பை ஏற்படுத்தும்



தற்போது, தேர்தலை ஒட்டி, பல்வேறு தரப்பினரும், கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை, இம்மாநிலங்களில் ஓட்டுப் பதிவுக்கு, 48 மணி நேரத்துக்கு முன்பு வரை வெளியிடலாம்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29 இரவு, 7:00 மணி வரை வெளியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 'டிவி' மற்றும் பத்திரிகை என, ஊடகங்கள் எதிலும் கருத்துக் கணிப்புகள் கூடாது என்றும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கருத்துக் கணிப்புகள், மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதாலும், ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளில், பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு களுக்கு, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-202123:12:29 IST Report Abuse
Pugazh V ஆங்கில பழமொழி ஒன்று உண்டு: "குதிரைகள் வெளியே ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டுவது போல " - கிட்டத்தட்ட எல்லா மொழி சேனல்களும்.பத்திரிகைகளும் மக்களின் கருத்து கேட்டு கணிப்பு நடத்தி முடித்து டெலிகாஸ்ட் மற்றும்.பப்ளிஷ் பண்ணியாச்சு. இப்போது வந்து இப்படி ஒரு கட்டுப்பாடா??
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-மார்-202116:59:41 IST Report Abuse
Vijay D Ratnam அதெல்லாம் கருத்துக் கணிப்புகள், மக்கள் மனதில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாது. எல்லாம் விளம்பரம். அதற்கு ஒரு ரேட் உள்ளது. கூலிக்கு வெளியிடப்படும் விளம்பாம் என்று ஆட்டையாம்பட்டி மாட்டு சந்தையில ஆப்பம் சுட்டு விக்குற ஆயாவுக்கு கூட தெரியும்ஜி.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-மார்-202115:49:01 IST Report Abuse
sankaseshan தலையில்லாதவனே தாவப்போவது திமுகக்காரனுங்கதான் . மே 2 க்குப்பின் தெரியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X