பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடியில் 'வெப் கேமரா' பொருத்தும் பணி துவக்கம்

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.தமிழகத்தில், ஏப்., 6ல்சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா நோய் பரவலைதடுக்கும் விதமாக, இம்முறை கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், குறைந்தது, 50 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில்,

சென்னை: தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.தமிழகத்தில், ஏப்., 6ல்சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா நோய் பரவலைதடுக்கும் விதமாக, இம்முறை கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.



latest tamil news


அதன்படி, 88 ஆயிரத்து, 937 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், குறைந்தது, 50 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், தமிழகத்தில், 44 ஆயிரத்து, 758 ஓட்டுச்சாவடிகளில், வெப் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இணையதள இணைப்பு வசதி கிடைக்கும் ஓட்டுச்சாவடிகளைக் கண்டறிந்து, அவற்றில், வெப் கேமரா பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.இந்த ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, முழுமையாக, இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். இதை, அதிகாரிகளால் நேரடியாக கவனிக்க முடியும்.வெப் கேமரா பொருத்தப்படாத ஓட்டுச்சாவடிகளின் ஓட்டுப்பதிவு, வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


கலெக்டர்களுடன் சாஹு ஆலோசனைசட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நேற்று, மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
28-மார்-202115:27:31 IST Report Abuse
Hari அப்போ தி மு க ஜெயிக்கமுடியாதா ?
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
28-மார்-202112:50:24 IST Report Abuse
Sathiamoorthy.V அப்படியே ஒட்டுக்கள் என்னும் இடத்திலேயும் கேமராக்களை வையுங்கள் . ரகசிய ( SPY) கேமராக்களையும் ரகசிய இடத்தில் வையுங்கள் அங்கேதான் மிக பெரிய அளவில் தில்லு முள்ளு நடக்க வாய்ப்பு இருக்கிறது . ஒட்டுக்கள் எண்ண நீண்ட கால இடைவெளி . கரோனா வேறு. 144 தடை சட்டம் போட்டு புகுந்து விளையாடி விடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X