ராசா மீதும் அம்மாயிக்கு கோபம் வராதுங்க...!: இ.பி.எஸ்., தாய் பற்றி ஊர் மக்கள் உருக்கம்

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (91)
Advertisement
இடைப்பாடி: ஆபாசமாக பேசிய ராசா மீது கூட முதல்வர் பழனிசாமி தாயார் தவுசாயம்மாளுக்கு கோபம் வராது என்று ஊர்மக்கள் உருக்கமாக கூறினர். சேலம் மாவட்டம், இடைப்பாடி, சிலுவம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்ப கவுண்டர். இவரது மனைவி தவுசாயம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகள். பெயர் விஜயலட்சுமி, 74. இரண்டு மகன்கள். மூத்த மகன் கோவிந்தராஜன், 70, இளைய மகன் பழனிசாமி, 67.விவசாயம் மட்டுமே

இடைப்பாடி: ஆபாசமாக பேசிய ராசா மீது கூட முதல்வர் பழனிசாமி தாயார் தவுசாயம்மாளுக்கு கோபம் வராது என்று ஊர்மக்கள் உருக்கமாக கூறினர்.latest tamil newsசேலம் மாவட்டம், இடைப்பாடி, சிலுவம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்ப கவுண்டர். இவரது மனைவி தவுசாயம்மாள். இந்த தம்பதிக்கு ஒரு மகள். பெயர் விஜயலட்சுமி, 74. இரண்டு மகன்கள். மூத்த மகன் கோவிந்தராஜன், 70, இளைய மகன் பழனிசாமி, 67.

விவசாயம் மட்டுமே செய்து வந்த கருப்ப கவுண்டர், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வயலையும், வேளாண்மையையும் நேசித்தவர் தவுசாயம்மாள். கணவன் இறந்த பின், இரு மகன்களையும் அடிக்கடி வயலுக்கு வரவழைத்து, விவசாயத்தை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என, அனுபவ யோசனைகள் சொல்லி வந்தார். சின்ன மகன் அரசியலுக்கு போனாலும், விவசாயத்தை மறந்து விடாதே என, வேர்களை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், இடைப்பாடி தொகுதியில், இ.பி.எஸ்., தோல்வி அடைந்தார். அப்போது, அரசியல் எதிரிகள் கும்பலாக வந்து, இ.பி.எஸ்., வீட்டு முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதை விசாரிக்க வெளியே புறப்பட்டவர்களை, தவுசாயம்மாள் தடுத்து விட்டார்.

'நம்ம வீட்டு முன்ன பட்டாசு வெடிக்கதுல, அவங்களுக்கு சந்தோசம்னா வெடிச்சுட்டு போட்டும், விடுங்க. மத்தவங்க சந்தோசத்த ஒருநாளும் கெடுக்கக் கூடாது' என, தவுசாயம்மாள் கூறியதாக, ஊர் பெரியவர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், 'தவுசாயம்மாள், தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவர். விவசாய கூலியாட்கள் வேலை செய்யாமல் ஏமாற்றினால் கூட, கண்டிக்காமல் கடுஞ்சொல் பேசாமல், பக்குவமாக எடுத்து சொல்லுவார். அந்தளவுக்கு மென்மையானவர். அத்தனை நல்லவரான ஒரு தாயை, கேவலமாக பேசியவரை கடவுள் கேட்பார்' என்றனர்.


latest tamil news'அம்மாயி இப்ப இருந்திருந்தா, இதுக்குகூட கோவப்பட்டு இருக்காது. நம்மள இப்டி கேவலமா பேசுரதுல, அந்த புள்ளைக்கு சந்தோசம்னா, அப்படியே இருந்துட்டு போகட்டும். அவரு சந்தோசத்த கெடுக்க கூடாது... அப்டீனுதான் சொல்லும்' என்றார் ஒரு பெரியவர். தவுசாயம்மாள், கடந்த ஆண்டு அக்டோபரில், 89 வயதில் காலமானார். அவரை பற்றி, தி.மு.க., மூத்த தலைவர் ஆ.ராசா அசிங்கமாக பேசிய தகவல் கேள்விப்பட்டு, இடைப்பாடி வட்டாரத்தில், கட்சி வேறுபாடுகளை கடந்து, மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
03-ஏப்-202113:11:06 IST Report Abuse
ShivRam ShivShyam //மத்தவங்க சந்தோசத்த ஒருநாளும் கெடுக்கக் கூடாது...அந்த புள்ளைக்கு சந்தோசம்னா, அப்படியே இருந்துட்டு போகட்டும். அவரு சந்தோசத்த கெடுக்க கூடாது// கண்களில் நீர் பணிக்க செய்யும் வாக்கியங்கள் ..மக்களே இந்த அசிங்கம் பிடித்த தீயமுகவிற்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள் இல்லையேல் நாளை உங்கள் அம்மாவும் சகோதரியும் மனைவியும் இதேபோல் அழைக்கப்படுவர் ..ஆனால் நாம் அந்த வாழும் தெய்வம் தவுசாயம்மாள் மாதிரி எல்லாவற்றையும் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் இல்லை
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
01-ஏப்-202104:36:39 IST Report Abuse
meenakshisundaram வருங்கால (?) முதல்வர் ஸ்டாலின் தாய் பற்றி திருக்குவளையிலே உள்ள மக்கள் இவ்வாறு சொல்வார்களா?கரிய இருட்டில் காமராஜர் காட்டு யானையை காதலித்தார் னு வசனம் எழுதிய மூடர் கூட்டம் தானே திமுக
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
31-மார்-202111:11:38 IST Report Abuse
mohankumar கவுண்டர் இந மக்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் தாயாரை, வெள்ளை சீலை கட்டிய பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள் . இடப்படியின் தாயார் மிக வயதான பெண்மணி இறந்து போன தெய்வத்தை பற்றி கூறிய தி மு க வை சும்மா விடுவார்களா ? கவுண்டர் சமூக ஓட்டுகள் தி முக விற்கு அவுட் .
Rate this:
periasamy - Doha,கத்தார்
31-மார்-202117:25:56 IST Report Abuse
periasamyஇறந்து போன தாயை சாதி இந்துக்கள் அனைவருமே தெய்வமாகத்தான் வணங்குகிறோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X