போலந்தில் நாய்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
வார்சா: போலந்தில், நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, 'பென்ஷன்' வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஐரோப்பிய நாடான போலந்தில், போலீஸ், எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில், நாய்கள், மற்றும் குதிரைகளும் பணியாற்றி வருகின்றன. இவை ஓய்வுபெற்ற பின், எதிர்காலத்திற்கு தேவையான உரிய பாதுகாப்பு அவற்றுக்கு வழங்கப்படாமல்

வார்சா: போலந்தில், நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு, 'பென்ஷன்' வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news


ஐரோப்பிய நாடான போலந்தில், போலீஸ், எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை உள்ளிட்ட பிரிவுகளில், நாய்கள், மற்றும் குதிரைகளும் பணியாற்றி வருகின்றன. இவை ஓய்வுபெற்ற பின், எதிர்காலத்திற்கு தேவையான உரிய பாதுகாப்பு அவற்றுக்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அந்த விலங்குகளுக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கி, ஓய்வுபெற்ற பின், அவற்றுக்கு பென்ஷன் வழங்குவதற்கான புதிய சட்ட மசோதாவை, போலந்து உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.இதுகுறித்து, உள்துறை அமைச்சர் மேரியுஸ் கமின்ஸ்கி கூறியதாவது:இந்த சட்ட மசோதா, அடுத்த சில மாதங்களில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.


latest tamil news


இதற்கு, எம்.பி.,க்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளிப்பர் என நம்புகிறோம். இந்த பென்ஷன், ஓய்வுபெறும் விலங்குகளின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
28-மார்-202120:28:22 IST Report Abuse
Ramesh Sargam நம்ம இந்தியாவுல மனிதனுக்கே பென்ஷன் கொடுக்க முடியல... கொடுத்து வாய்த்த போலந்து நாட்டு நாய்கள்...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-மார்-202119:27:21 IST Report Abuse
தமிழவேல் காப்பகம் ஏற்படுத்தி செயல்படுத்தலாம்.
Rate this:
Cancel
Nsnatarajan Iyer - Bangalore,இந்தியா
28-மார்-202115:06:15 IST Report Abuse
Nsnatarajan Iyer எங்க ஊருக்கு வாங்க. திமுக ... களுக்கு ஆராசா 200 ரூபா கொடுப்பாருங்க. இதுகளும் சந்தோஷமா வாங்கிக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X