நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும்

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
'இப்போது, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். நாளைய முதல்வர், புரட்சி கலைஞர் பேசுவார்' என்ற அறிவிப்பு வெளியான மறுவினாடி விசில் பறக்கிறது. 'கேப்டன் வாழ்க...' என, தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிடுகின்றனர். 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே...' என, வழக்கமான கம்பீரத்துடன் பேச்சை துவக்குகிறார் விஜயகாந்த்.கை தட்டலும், விசில் சப்தமும்
TamilnaduElections2021, DMDK, Vijaykanth,

'இப்போது, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். நாளைய முதல்வர், புரட்சி கலைஞர் பேசுவார்' என்ற அறிவிப்பு வெளியான மறுவினாடி விசில் பறக்கிறது. 'கேப்டன் வாழ்க...' என, தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிடுகின்றனர். 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே...' என, வழக்கமான கம்பீரத்துடன் பேச்சை துவக்குகிறார் விஜயகாந்த்.

கை தட்டலும், விசில் சப்தமும் இடைமறிக்க, 'ஏய்... சும்மா இருக்க மாட்டீங்க. நீங்க கேக்கணும் தானே பேச வந்திருக்கேன்' என்ற, அவரின் அன்பான அதட்டலுக்கு, அமைதியை பதிலாக தருகின்றனர் தொண்டர்கள். 'கிட்டதட்ட பழம் நழுவி, பாலில் விழுந்தது என, முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். ஆனா, நாலு சகுனி பசங்களால, அந்த பழம் சாக்கடையில் விழுந்தது. அது, இப்பதான் சரியாகி, அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைச்சிருக்கேன்' என, சொன்ன போது, அ.தி.மு.க., மீதான அவரின் உச்சபட்ச கோபம் வெளிப்பட்டது.


latest tamil newsபேச்சின் இடையில், அவ்வப்போது வரும், 'கரகர' குரல், அதன் தொடர்ச்சியாக வரும் கர்ஜனை பேச்சு என பேச்சில், கட்டுண்டு கிடந்தது அந்தக்கூட்டம். பேசி முடித்த பின், மக்கள் அவரிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கொட்டினர். தொண்டர்களுக்கு, அவர், 'கறுப்பு எம்.ஜி.ஆர்.,' ஆயிற்றே!
இதெல்லாம் நடந்தது, நேற்று இரவு, 9:00 மணிக்கு, திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் தான்.அட... ஆச்சரியமாக இருக்கிறதா? விஜயகாந்த் வந்தாரா... ஆச்சரியத்தில் விழிகள் விரியலாம். ம்ஹூம்...விஜயகாந்த் வரவில்லை; அவரை போன்றே, 'மிமிக்ரி' செய்யும் வல்லரசு என்ற கலைஞன் தான், விஜயகாந்தை கண்முன் கொண்டு வந்து, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.


latest tamil newsஅச்சு அசலாக விஜயகாந்த் பேசுவது போன்றே அவர் பேசிய விதம், 'பாடி லாங்வேஜ்' போன்றவை, கட்சியினரை மட்டுமின்றி, கூடியிருந்த பார்வையாளர்களையும், ஒரு நிமிடம் அவர் பக்கம் பார்வையை திருப்ப செய்தன. அவிநாசி தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் மீராவை ஆதரித்து, விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் தான் இது நடந்தது. ஒரு 'மிமிக்ரி' கலைஞர், ஒரு கட்சி தலைவனின் குரலில் பேசி, ஒரு கூட்டத்தையே கட்டுண்டு வைக்கிறார் என்றால், அந்த தலைவன் மீது தொண்டர்களுக்கு உள்ள பாசம் தான் எவ்வளவு?

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
30-மார்-202120:51:25 IST Report Abuse
S.Ganesan பிரேமலதா , சுதீஷ் , விஜய பிரபாகரன் என மூன்று பேர் கணக்கில் வருகிறது. அந்த நாலாவது சகுனி யாருங்க ?
Rate this:
vijay - coimbatore,இந்தியா
01-ஏப்-202112:49:36 IST Report Abuse
vijay//..அந்த நாலாவது சகுனி யாருங்க ?..// அந்த நாலாவது சனி வெளியில் இருந்து உள்ள வந்துச்சு. அது போற இடமெல்லாம் வெளங்காம போயிடுது. இப்போ துண்டுசீட்டு தலைவரை சப்பான் முதல்வராக ஆக்காமல் ஓயமாட்டேன் என்று சவால் விட்டு கடுமையா உழைச்சுகிட்டு இருக்கிறார்....
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஏப்-202101:07:34 IST Report Abuse
S.Ganesanஹா ஹா ஹா .சூப்பர்...
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
29-மார்-202116:00:15 IST Report Abuse
INDIAN Kumar மாற்று என்று சொன்னவர்கள் அந்த கருத்தில் உறுதியாக இருக்கவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் ஆகும்.
Rate this:
Cancel
வக்கீல் வண்டுமுருகன் - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
29-மார்-202107:55:48 IST Report Abuse
வக்கீல் வண்டுமுருகன் தமிழகம் திமுகவிடமிருந்து தப்பிக்க முதலில் எம்ஜியார் இருந்தார், பிறகு ஜெயலலிதா இருந்தார். 2011,2016ல் விஜயகாந்த் இருந்தார். பாவம் இந்த முறை தமிழகம் வைகோவை நம்பியே இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X