சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பா.ஜ., கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் அவமரியாதை மட்டுமே கிடைக்கிறது. நாட்டில் உள்ள அனைவரும் தங்களுக்கு மண்டியிட்டு வாழ வேண்டும் என மோடியும், அமித்ஷாவும் நினைக்கின்றனர். மோடி, அமித்ஷா காலில் முதல்வர் விழுந்து கிடக்கிறார். தொன்மையான தமிழகத்தின் பிரதிநிதியான முதல்வர் பா.ஜ.,வின் பாதங்களில் அடிபணிவது வேதனையாக உள்ளது. தங்களிடம் மண்டியிடுபவர்களிடம் மட்டுமே பா.ஜ., கூட்டணி வைத்து உள்ளது.
தமிழகத்தை தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்யப்படும் ஆட்சியை உருவாக்க வேண்டும். மக்களிடம் இருந்து சுரண்டிய பணம் காரணமாக, முதல்வர் அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறார். அனைத்து மொழிகளும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது தான். தமிழகம் பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. தமிழக அரசியலுக்கு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தமிழக பொருளாதாரம், இந்தியாவிற்கு வலிமையாக இருந்தது. ஆனால், அது அழிக்கப்பட்டு மோசமடைந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு புதிய சிந்தனை, புதுமை தேவைப்படுகிறது.
தமிழர்களை அமைக்கும் அரசாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருக்கும். டில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட அரசாக இருக்காது. இந்தியாவின் சிந்தனைக்கும், தமிழக பாரம்பரியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஆரம்ப புள்ளி வைத்தது பா.ஜ., ஆர்எஸ்எஸ்..

தமிழகம் யார் முன்னிலையிலும் தலை குனிந்ததாக சரித்திரம் இல்லை. 3 ஆயிரம் கால வரலாற்றில் தமிழகம் யார் முன்னிலையிலும் தலை கவிழ்ந்தது இல்லை. இந்த மண்ணிற்கு மரியாதை கொடுத்தவர்கள் கவுரவத்துடன் நடத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை அரவணைத்தால், தமிழகம் மத்திய அரசை அரவணைக்கும். இதனை நாங்களும், எங்களது குடும்பத்தினரும் புரிந்து கொண்டுள்ளனர்.
தமிழகம் இல்லாமல், இந்தியா இல்லை. தமிழகம் இல்லாமல் இந்தியா என்ற சிந்தனை இல்லை.இந்தியாவின் என்ற சிந்தனைக்கும் அடித்தளம், சிந்தனையே தமிழகம் தான். ஜனநாயகம் மீதும், அரசியலமைப்பு சட்டம், அனைத்து அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. தொழில்முனைவோரின் தலைநகராகவும், உற்பத்தியாளர்களின் தலைநகராகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழகம் என்ற ஆன்மா மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் ரூபாய் நோட்டு வாபஸ், சிறுகுறு தொழில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் அது.
இந்த துறை தான் இந்தியாவிற்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இது முடிந்த உடன் ஜிஎஸ்டி என்ற பெரிய தாக்குதல் உற்பத்தி துறை மீது நடத்தப்படுகிறது. உற்பத்தி துறை முடிந்த பிறகு விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகள் நலிவடையும் வகையில் 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கார்பரேட் நிறுவனங்களிடம் அடிமைப்படுத்தும் வகையில், வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலை நிறுத்துவதற்கு ஒரு வழியாக இந்த தேர்தல் இருக்கும். நான் பிறப்பால் தமிழன் அல்ல. ஆனால், தமிழர்களின் மனம் எனக்கு புரியும். தமிழை படிக்க ஆரம்பித்தால், உங்களை இன்னும் புரிந்து கொள்ள முடியும். மெதுவாக தமிழை கற்று கொள்ள முயற்சி செய்கிறேன். சில இலக்கியங்களை படித்து வருகிறேன். அதிமுக பாஜ., கூட்டணியை திமுக கூட்டணி முறியடிக்கும். இந்த தேர்தலில் பா.ஜ., ஆர்எஸ்எஸ் வேரறுக்கப்படுவார்கள். கடந்த தேர்தல்களில் கட்சிகளுக்கு இடையே நடந்த தேர்தல். தற்போது, அப்படி அல்ல. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மோதவில்லை. தற்போது அதிமுக, ஆர்எஸ்எஸ், மோடி, அமித்ஷாவுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இந்த தேர்தல் முடிவுகளில், அதிமுக, மோடி, அமித்ஷா கூட்டணி தூள்தூளாக்கப்படும். அதை செய்யும் சக்திதான் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி.
இந்த மோதல் அங்குடன் இருக்காது. தமிழகத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் அத்துடன் நிற்காது. பா.ஜ., ஆர்எஸ்எஸ்., டில்லிக்கு ஓடும்போது தான் அந்த தாக்குதல் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE