பூக்கார கனகாவும்,பால்கார சரோஜாவும்..

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021
Share
Advertisement
ஒரு வருட கால கொரோனா மவுனத்திற்கு பிறகு நடந்த பிரம்மாண்ட விழா அது.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்ததை பாராட்டி சென்னையில் உள்ள சபாக்கள் ஒன்றினைந்து கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் விழாவினை கடந்த 27 ந்தேதி நடத்தினர்.நகரில் உள்ள பிரமுகர்கள் பலரும் விருந்தினர்களாக வந்திருந்தனர்.விதவிதமான கார்களில்
 பூக்கார கனகாவும்,பால்கார சரோஜாவும்..


latest tamil news


ஒரு வருட கால கொரோனா மவுனத்திற்கு பிறகு நடந்த பிரம்மாண்ட விழா அது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்ததை பாராட்டி சென்னையில் உள்ள சபாக்கள் ஒன்றினைந்து கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரமத்தில் விழாவினை கடந்த 27 ந்தேதி நடத்தினர்.
நகரில் உள்ள பிரமுகர்கள் பலரும் விருந்தினர்களாக வந்திருந்தனர்.விதவிதமான கார்களில் பூங்கொத்துக்களுடன் வந்திறங்கினர்.
அப்படி ஒரு விலை உயர்ந்த காரில் வந்திறங்கிய இரண்டு மூதாட்டிகள் பலரின் கவனத்தை கவர்ந்தனர்.அவர்கள் உடையும் உருவமுமே சொல்லியது மிக எளியவர்கள் அவர்கள் என்று.
யார் அவர்கள் என்பதற்கான விடை விழா ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கிடைத்தது.
பாராட்டு விழா மேடையில் இயக்குனர் முத்துராமன் துவங்கி பாடகி சுதா ரகுநாதன் வரை தங்களில் யாரை முதலில் பாராட்ட அழைக்கப் போகின்றனர் என்று எதிர்நோக்கியிருந்தனர்.
அந்த நேரத்தில்தான் நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி தெரிந்து பலருக்கு உதவுகிறார் என்றால் தெரியாமல் பலருக்கு உதவி வருகிறார்.
அவரின் உதவி பெறுபவர்களில் அன்றாடம் வீடுகளில் பால் போடும் சரோஜா அக்காவும்,பூக்கட்டி வியாபராம் செய்யும் கனகாவும் அடங்குவர்.
இவர்கள் இருவருக்கும் என்ன விருப்பம் என்று கேட்ட போது முரளி அவர்களின் பாராட்டு விழாவினை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களை அழைத்து வருவதில் இருந்து கொண்டு விடுவது வரை ஒரு தனி கார்,அவர்களை சிற்றுண்டி கொடுத்து உபசரித்து கவனித்துக் கொள்ள ஒரு உதவியாளர் என்பது போன்ற ஏற்பாடுகளுடன் அவர்கள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
இருவருக்குமே கிட்டத்தட்ட எண்பது வயது ஆகவே மூத்த சகோதரிகள் போன்ற அவர்களின் ஆசியை முதலில் பெற முரளி விருப்பப்படுகின்றார் என்று சொல்லி, காரில் அழைத்து வரப்பட்ட இரு மூதாட்டிகளையும் மேடைக்கு அனுப்பினர்.


latest tamil news


மேடைக்கு வந்த அந்த மூதாட்டிகள் இருவரையும் வணங்கி வரவேற்ற முரளி அவர்களுக்கு புடவை உள்ளீட்ட பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார் .
இரு மூதாட்டிகளும் தங்களது சேலையில் முடிந்து எடுத்து வந்திருந்த திருநீறை எடுத்து பூசி முரளியை மனதார ஆசீர்வாதித்தனர், மைக்கில் இரண்டு வார்த்தை நானும் பேசுறேம்பா என்று மைக்கை வாங்கிய பால்கார சரோஜா ‛ஐயா நீங்க நீடுழி நல்லாயிருக்கணும்' என்ற நாத்தழுதழுக்க வாழ்த்தினார்.
மேடையை விட்டு இறங்கிய அந்த மூதாட்டிகள் இருவரும் காரில் திரும்பச் செல்லும் வரை அனைவரது பார்வையும் அவர்கள் மீதுதான் இருந்தது அதன் பிறகு இதற்கு காரணமான முரளி மீது விழுந்தது.
பின்னர் பேசிய இயக்குனர் முத்துராமன்,இந்த நிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு அவர்களின் அந்த உளமார்ந்த வாழ்த்திற்கு நிகரான வாழ்த்து இனி இருக்கப் போவதில்லை என்றார்.
உண்மைதான் என்பது போல சபை ஆராவாரமாக கைதட்டி அவரது வார்த்தையை ஆமோதித்தது,
-எல்.முருகராஜ்


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X