அரசியல் செய்தி

தமிழ்நாடு

என் தாயை இழிவுபடுத்துவதா: பிரச்சாரத்தில் கண்கலங்கிய முதல்வர்

Updated : மார் 28, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: என் தாயை இழிவுபடுத்திபேசுவதா என திருவெற்றியூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உணர்ச்சிவசப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது:நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்., நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும்.

சென்னை: என் தாயை இழிவுபடுத்திபேசுவதா என திருவெற்றியூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உணர்ச்சிவசப்பட்டார்.latest tamil newsகடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது:நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்., நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். அவர்,பழனிசாமி ., கையை துாக்கி பிடித்து, 'தி.மு.க., ஊழல் கட்சி' என்கிறார். என தேர்தல் பிரசாரம் செய்தார்.


ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குபதிவுராசாவின் பேச்சு குறித்து அ.தி.மு.க.,சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்தியபிரதாசாகுவிடம் புகார் மனு அளித்துள்ளது.மேலும் போலீசார் ராசா மீது ஆபாசமாக பேசுதல் தேர்தல் விதிமுறைகளை மீறுதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே முதல்வர் பழனிசாமி திருவெற்றியூரில் அ.தி.மு.க.,வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் முன்னாள் தி.மு.க.,மத்திய அமைச்சர் ராசா என் தாயை பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். சாதாரணமானவர் முதல்வராக வந்தால் என்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் மக்களான உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? இவர்கள் ஆட்சிக்கு வர நேரிட்டால் பெண்களின் நிலைமை என்னவாகும்.


latest tamil news

கடவுள் தண்டனை தருவார்ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தாய் தான் உயர்ந்த இடம். பெண்கள், தாய் என யாராக இருந்தாலும் இழிவாக பேசினால் கடவுள் நிச்சயமாக அதற்கு உரிய தண்டனையை தருவார். இதை பற்றி நான் பேச வேண்டும் என நினைக்க வில்லை. தாய்மார்கள் இருந்ததால் பேசி விட்டேன். உங்களில் ஒருவனாக இருந்து பேசுகிறேன் இந்த அரசு மக்களின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வருகிறது. என்தாய் இப்போது இறந்து விட்டார். அவரை பற்றி தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசி உள்ளார். அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க வேண்டும்.

சாலை வசதி, மருத்துவ வசதி, காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது, குடிதண்ணீர் சரியாக வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக இருக்கிறது. எனவே அதிமுகவின் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
29-மார்-202111:37:10 IST Report Abuse
ganapati sb திகார் ஊழல் அடாவடி ராசா ஆபாச பேசினால் மட்டுமல்லாது எளிமையாக கவனமாக உழைக்கும் எடப்பாடி மீண்டும் வெல்வார் என ஆளும் கிரஹ நிலைகள் பிரசன்ன ஜோதிட முறையிலும் தேர்தல் தேதி அறிவித்ததும் கூறிவிட்டன.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
29-மார்-202111:23:29 IST Report Abuse
Malick Raja அய்யா முதல்வரே .. ஆ.ராசா உவமையாக சொன்னது அதை திரித்து ஆஹா . ஓஹோன்னு .. அலுத்துக்கொண்டு இப்படி கானல்நீர் கண்ணீர் வடித்தால் . மக்கள் உஷாராக இருக்கிறார்கள் . அப்பூ .. இடத்தை காலிபண்ணுங்க ..
Rate this:
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
29-மார்-202110:52:47 IST Report Abuse
விமர்சகன் ஒரு உயர் பதவியை அடைய வேண்டுமென்றால் சிறப்பாக சேவை செய்து நேர்மையாக நடந்து படிப்படியாக முன்னேறி அடைவதுதான் அதைவிடுத்து அப்பதவியை அதை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்தால் அதற்குப் பெயர் என்ன அதை பற்றி தான் ராசா பேசியிருக்கிறார் இது கூடப் புரிந்து கொள்ளாமல் நீலிக்கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
29-மார்-202111:34:35 IST Report Abuse
R MURALIDHARANராசா கீழ்த்தரமாக பேசினார் என்பதுகூட உங்களால் ஏற்கமுடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. சிலேடை பேச்சு ஆபாச பேச்சு என்பது திராவிட கட்சிகளின் கலாச்சாரம். இது அண்ணாதுரையின் காலம் தொட்டே இருந்து வருகிறது...
Rate this:
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
29-மார்-202113:16:49 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  விமர்சகா.. அண்ணா இறந்த பெறவு அடுத்த ஆளு எப்டி திமுக தலைவர் பதவியை லவட்டுனாருன்னு ஓம்பாஷைல சொன்னா அப்பதவியை அடைந்தார்னு சொன்னா நல்லா இருக்கும்.. தரம் தாழ்ந்தவன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காவிடினும் பரவாயில்ல முட்டு கொடுக்காதீங்கடா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X