சிக்கலில் சரத் பவார்!| Dinamalar

சிக்கலில் சரத் பவார்!

Updated : மார் 30, 2021 | Added : மார் 28, 2021 | கருத்துகள் (2)
Share
சமீப காலமாக, மஹாராஷ்டிராவில் நடந்து வரும் அதிரடியான அரசியல் மாற்றங்கள், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. மும்பையில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில், சச்சின் வாஸே என்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், அதிரடியாக
 டில்லி உஷ்!

சமீப காலமாக, மஹாராஷ்டிராவில் நடந்து வரும் அதிரடியான அரசியல் மாற்றங்கள், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளன. மும்பையில், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கில், சச்சின் வாஸே என்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மும்பை போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங், அதிரடியாக மாற்றப்பட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த பரம்வீர் சிங், 'மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனக்கு மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து கப்பம் கட்ட வேண்டும் என, போலீசாரை மிரட்டுகிறார்' என, பரபரப்பான புகாரை தெரிவித்தார். அமைச்சர் தேஷ்முக், சரத் பவார் கட்சியைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சர் பதவியைப் பெற, பல தலைவர்கள் போட்டியிட்ட நிலையில், தேஷ்முக்கை தேர்வு செய்தவர் பவார்.இவர் எதைச் செய்வதாக இருந்தாலும், பவாரின் அனுமதி இல்லாமல் செய்ய மாட்டார். தேசியவாத காங்., கட்சியின் நிதி நிலையைக் கவனித்துக் கொள்ளவே, தேஷ்முக் உள்துறை அமைச்சராக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மும்பை போலீஸ் கமிஷனர் பதவியைப் பெற, பரம்வீர் சிங்கும், 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலனாய்வுத்துறை இந்த வழக்கை விசாரிக்கிறது. இதற்கிடையே, பவாரின் போன் உரையாடல்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளார், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ். இதனால், சரத் பவார் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.


மோடியை திட்ட வேண்டாம்



'தமிழகத்தில் பா.ஜ., வேரூன்றி விட்டது. ஸ்டாலின், பிரதமர் மோடியை திட்டி பிரசாரம் செய்கிறார். இது சரியல்ல. பா.ஜ., வை விமர்சியுங்கள்; அவர்களுடைய கொள்கைகளை விமர்சியுங்கள். ஆனால், மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய வேண்டாம். 'அது, அவர்களுக்கு சாதகமாக முடியும் என ஸ்டாலினிடம் கூறினேன். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை' என, இடதுசாரிகளின் செயற்குழு கூட்டத்தில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி வருத்தப்பட்டாராம்.மோடியை அதிகமாக விமர்சித்தால், அது, அவருக்கே சாதகமாக அமையும் என்பது, கடந்த கால அரசியல் வரலாறு. இதன் காரணமாகவே, ஸ்டாலினிடம், யெச்சூரி இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.


ரகசிய பேச்சு



மம்தா பானர்ஜி, மீண்டும் மேற்கு வங்க முதல்வர் ஆகக் கூடாது என்பதில், இடதுசாரிகள் ஆர்வமாக உள்ளனர். மம்தாவிற்கு, பா.ஜ., சரியான போட்டி கொடுப்பதால், இடதுசாரி தலைவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.சமீபத்தில் கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு வரவேற்பறையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது திடீரென உள்துறை அமைச்சர் அமித் ஷா, யெச்சூரி அமர்ந்திருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் வெளியேற முயற்சித்தார் யெச்சூரி. அதற்குள் அமித் ஷா, தன் பாதுகாவலர்களை வெளியே அனுப்பிவிட்டு, 'உட்காருங்கள்' என, யெச்சூரியிடம் அன்பாக சொன்னாராம். வேறு வழியில்லாமல் யெச்சூரி அமர, அறைக் கதவை சாத்திவிட்டாராம் அமித் ஷா.அரை மணி நேரம், அந்த அறைக் கதவு திறக்கப்படவே இல்லை. அவ்வளவு நேரம் அமித் ஷாவும், யெச்சூரியும் என்ன பேசினர் என்பது ரகசியமாகவே உள்ளது

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X