தேவை இன்னும் நிறைய யோகநாதன்கள்...| Dinamalar

தேவை இன்னும் நிறைய யோகநாதன்கள்...

Updated : மார் 29, 2021 | Added : மார் 29, 2021 | கருத்துகள் (2)
Share
எந்த வேலையில் இருந்தாலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதைச் செயலாற்றும் திட்டமும் மட்டும் இருந்தால் போதும், இந்திய பிரதமரின் மனதிலேயே இடம் பிடித்துவிட முடியும் என்பதற்கான உதாரணம்தான் யோகநாதன்.கோவையைச் சேர்ந்த அரசு பஸ் நடத்துனர் , காந்திபுரம்-மருதமலை வழித்தடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்.இதல்ல இவரது பெருமை இந்த வேலையின் மூலம்latest tamil news


எந்த வேலையில் இருந்தாலும் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் அதைச் செயலாற்றும் திட்டமும் மட்டும் இருந்தால் போதும், இந்திய பிரதமரின் மனதிலேயே இடம் பிடித்துவிட முடியும் என்பதற்கான உதாரணம்தான் யோகநாதன்.
கோவையைச் சேர்ந்த அரசு பஸ் நடத்துனர் , காந்திபுரம்-மருதமலை வழித்தடத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பவர்.இதல்ல இவரது பெருமை இந்த வேலையின் மூலம் வருமானத்தில் கணிசமான பகுதியை ஒதுக்கி அதில் மரம் வளர்ப்பிற்கான செடிகள் வாங்கி மாணவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பல இடங்களில் மரம் வளர்த்து வருகிறார்.


latest tamil news


கடந்த 33 வருடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் இவரது முயற்சியால் வளர்க்கப்பட்டு உள்ளது.சிறு வயது முதலே மரம் வளர்ப்பில் ஆர்வம் கொண்டிருந்தவருக்கு அரசு வேலை கிடைத்ததும் மரம் வளர்ப்பு ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொ்ண்டார்..கடந்த 22 வருடங்களாக பஸ் நடத்துனராக இருக்கும் இவர் எப்போதும் பஸ்சில் மரக்கன்றுகள் வைத்திருப்பார் ஆர்வம் உள்ள பயணிகளுக்கு அந்த மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவார்.
விடுமுறை நாட்களில் பள்ளி கல்லுாரி மாணவர்களை சந்தித்து மரங்கள் பற்றி முக்கியத்துவத்தை விளக்குவதுடன் அவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் மரங்களை நடுவார்.பொதுமக்கள் அழைப்பின் பேரிலும் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்று மரங்களை நட்டு அதை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறுவார்.இப்படி கோவை மட்டுமின்றி கோவையைத் தாண்டியும் தனது மரம்நடும் பணியை செய்துவருகிறார்.
சரியாக கணக்கு வைத்துக் கொள்ளாவிட்டாலும் தனது முயற்சியால் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் இப்போது பலன் தந்து கொண்டிருக்கிறது என்கிறார் பெருமையுடன்.
தனது செயலுக்கு எந்த பாராட்டையும் விருதையும் எதிர்பார்ப்பவர் அல்ல ஒரு முறை இவருக்கு சுற்றுச்சுழல் விருது அறிவிக்கப்பட்டது அதனை வாங்கிக் கொள்ள டில்லி வருமாறும் அழைப்பு விடப்பட்டது, நமக்கு மரம் நடற வேலையிருக்கு அதனால வரமுடியாது விருதை தபாலில் அனுப்புங்க என்று சொல்லிவிட்டார்.உதவிஜனாதிபதி விருது வழங்குகிறார் என்றார் அடித்து பிடித்து குடும்பத்தோடு போய் விருது வாங்கிக் கொள்ளத்துடிக்கும் மனிதர்கள் மத்தியில் இப்படியும் ஒருவர் அதன்பிறகு அவரை வற்புறுத்தியதன் பேரில் டில்லி போய் விருதை பெற்றார்.
மரங்களின் மைந்தன் என்றழைக்கப்படும் யோகநாதனின் மரம் வளர்ப்பு பணி பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛மன் கி பாத்' (மனதின் குரல்) ரேடியோ நிகழ்ச்சியில் பேசும் போது யோகநாதனைப் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.
அவரது பாராட்டிற்கு பிறகு இன்னும் உற்சாகம் வரப்பெற்றுள்ள யோகநாதன் ஐந்து மரத்திட்டம் என்று ஒரு திட்டம் ஒன்றை செயல்படுத்த எண்ணியுள்ளார் இந்த திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ளவர்களின் வீடுகளில் மா,பலா,வாழை,மாதுளை,கொய்யா போன்ற ஐந்து மரங்களை வளர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் .ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து மரம் என்று இந்த திட்டத்தால் மக்களும் பலன் பெறுவார் மண்ணும் வளம் பெறும் என்கிறார்.
என்னைப் பாராட்டுவதை விட என்னைப் பார்த்து மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுங்கள் அதுதான் நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும், செலுத்தும் நன்றி என்று சொல்லும் யோகநாதனைப் பார்த்து இன்னும் பல ‛யோகநாதன்கள்' வரவேண்டும்.இவரிடம் பேசுவதற்கான எண்:94430 91398.

-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X