ஹத்ராஸ் சம்பவத்தில் அமித்ஷா மவுனமாக இருந்தது ஏன்?: மம்தா கேள்வி

Updated : மார் 29, 2021 | Added : மார் 29, 2021 | கருத்துகள் (10) | |
Advertisement
நந்திகிராம்: மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பா.ஜ., தொண்டரின் தாய் இன்று(மார்ச் 29) உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, உ.பி.,யில் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் எரிக்கப்பட்டபோது ஏன் மவுனமாக இருந்தார் என அம்மாநில முதல்வர் மம்தா
Westbengal, Amitshah, MamataBanerjee, TMC, Hathras, மேற்குவங்கம், மம்தா, திரிணமுல் காங்கிரஸ், ஹத்ராஸ்

நந்திகிராம்: மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பா.ஜ., தொண்டரின் தாய் இன்று(மார்ச் 29) உயிரிழந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்த அமித்ஷா, உ.பி.,யில் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் எரிக்கப்பட்டபோது ஏன் மவுனமாக இருந்தார் என அம்மாநில முதல்வர் மம்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம் பர்கானா மாவட்டத்தில் உள்ள நிம்தா பகுதியில் கடந்த மாதம் பா.ஜ., தொண்டர் ஒருவரின் வயதான தாய் மீது திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதனை திரிணமுல் காங்., கட்சி மறுத்தது. இந்நிலையில் காயமடைந்திருந்த பா.ஜ., தொண்டரின் தாய் ஷோவா மஜும்தார் இன்று (மார்ச் 29) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பா.ஜ., தொண்டரின் தாய் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்ததுடன், திரிணமுல் காங்., கட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்நிலையில் நந்திகிராமில் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சகோதரி மஜும்தார் எவ்வாறு இறந்தார் என எனக்கு தெரியாது. எங்களுடைய சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறையை ஆதரிக்கமாட்டோம். இந்த விஷயத்தை பா.ஜ., அரசியலாக்குகிறது. மஜும்தார் இறந்தது குறித்து அமித் ஷா இரங்கல் தெரிவித்து கருத்துத் தெரிவிக்கிறார். ஆனால், பா.ஜ., ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் எரிக்கப்பட்டபோது அமித் ஷா ஏன் மவுனமாக இருந்தார்? இவ்வாறு அவர் கேள்வியெழுப்பினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மார்-202111:26:19 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மமதை பனர்ஜீ .. நீ எந்நாளும் காலில் கட்டுண்டு (சிறைக்குள்) இருக்கவேண்டிய நேரம் வந்து விட்டது.. சாரதா சீட் பெண்ட் ஊழல்..
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
30-மார்-202107:15:32 IST Report Abuse
Darmavan மம்தா பேகம் தன் மாநிலத்தை பற்றி பேசுவதை விடுத்தது உ பி பற்றி பேசுவது ஏமாற்று வேலை.
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
30-மார்-202110:25:28 IST Report Abuse
தமிழன்இதே வார்த்தைய அமித்சா ஜி கும் சொல்லுங்களேன்...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-மார்-202106:56:04 IST Report Abuse
sankar காலில் கட்டுப்போட்டு காட்டினாலும் கதைக்கு ஆகாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X