புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை (மார்ச் 30) புதுச்சேரி வரவுள்ளார். இதனையடுத்து நாளை ஒருநாள் மட்டும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப்.,6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பா.ஜ., - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாளை புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக புதுச்சேரி வரவுள்ள பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக வான்வெளியில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளள இந்த தடை உத்தரவினை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலைத் திடலில் பா.ஜ., சாா்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனால், ஏஎப்டி பஞ்சாலைத் திடல் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE