"ஆ.ராசா... எப்போதுமே "ஆபாச" பேச்சு ராசாதானா?"| Dinamalar

"ஆ.ராசா... எப்போதுமே "ஆபாச" பேச்சு ராசாதானா?"

Updated : மார் 29, 2021 | Added : மார் 29, 2021 | கருத்துகள் (82) | |
சென்னை: திமுக எம்.பி.,யான ஆ.ராசா முதல்வரின் தாயாரை ஆபாசமாக பேசியது சர்ச்சயைானது அடங்கும்முன், அவர் ஆபாசமாக பேசிய மேலும் ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, கடந்த 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து,
TamilnaduElections, DMK, ARaja

சென்னை: திமுக எம்.பி.,யான ஆ.ராசா முதல்வரின் தாயாரை ஆபாசமாக பேசியது சர்ச்சயைானது அடங்கும்முன், அவர் ஆபாசமாக பேசிய மேலும் ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, கடந்த 26ம் தேதி, சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, முதல்வர் பழனிசாமியை இழிவுபடுத்தும் வகையில், அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார். முதல்வர் பழனிசாமி கள்ளஉறவில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என ஆ.ராசா பேசியது தமிழகம் முழுதும் பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, முதல்வர் பழனிசாமி நேற்றைய பிரசாரத்தின்போது ‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி, இழிவுப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வழங்க வேண்டும்,' என கண்ணீர் மல்க பேசினார். இதனால், ஆ.ராசா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படுவதை விளக்கினேன். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சிற்காக எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார்.


latest tamil news


ஆனாலும், முதல்வரின் தாயார் குறித்து ராசா பேசிய வார்த்தைகள் இன்னும் அடங்கியபாடில்லை. அதற்குள்ளாக அவரின் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ‛எடப்பாடி உனக்கு நல்ல சாவு வரும்னு நினைக்கிற? உங்க அம்மாவ விட நீ மோசமா சாவ..' எனப் பேசியிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ராசா பேசிய வீடியோ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பாக பேசியது என்றும், அதில் அவர் அம்மா எனக் குறிப்பிட்டது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை என்றும் கூறப்படுகிறது.


அநாகரிகமான பேச்சுகள்எப்படியிருந்தாலும், ஆ.ராசா அப்போது இருந்து இன்றுவரையில் ஆபாசமாகவும் இழிவாக பேசுவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளதாக பலரும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ராசாவின் ஆபாச மற்றும் அநாகரிகமான பேச்சுகள் பெண்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ராசாவின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஆவேச கருத்துகளை பெண்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X