'நாம் எல்லாரும் முட்டாள்களா?'
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதிய பஸ் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'மாலை, 4:00 மணிக்கு, சீமான் வருவார்' என அறிவித்த நிலையில், இரவு, 8:15 மணிக்கு தான், அவர் வந்தார்.
அவரை பார்க்க கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். வெறும், ஐந்தே நிமிடத்தில், தன் பேச்சை முடித்த சீமான், 'நான், 9:00 மணிக்கு, கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். அதை, தனியார் 'டிவி'யில் நேரலை செய்கின்றனர். நீங்கள் அமைதியாக வீட்டுக்குச் சென்று, 'டிவி'யில் பாருங்கள் ' என்றார்.அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'டிவியில பாத்துக்கலாமுன்னு, வீட்டுலையே இருக்காம, இங்கே இவ்வளவு நேரம் காத்திருந்த நாம் முட்டாள்களா...' என, ஆவேசப்பட்டார்.சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE