நாம் எல்லாரும் முட்டாள்களா?| Dinamalar

'நாம் எல்லாரும் முட்டாள்களா?'

Added : மார் 29, 2021
Share
'நாம் எல்லாரும் முட்டாள்களா?'திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதிய பஸ் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'மாலை, 4:00 மணிக்கு, சீமான் வருவார்' என அறிவித்த நிலையில், இரவு, 8:15 மணிக்கு தான், அவர் வந்தார். அவரை பார்க்க கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். வெறும், ஐந்தே நிமிடத்தில், தன்
 பக்க வாத்தியம்


'நாம் எல்லாரும் முட்டாள்களா?'



திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதிய பஸ் நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'மாலை, 4:00 மணிக்கு, சீமான் வருவார்' என அறிவித்த நிலையில், இரவு, 8:15 மணிக்கு தான், அவர் வந்தார்.
அவரை பார்க்க கட்சியினரும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். வெறும், ஐந்தே நிமிடத்தில், தன் பேச்சை முடித்த சீமான், 'நான், 9:00 மணிக்கு, கோவையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். அதை, தனியார் 'டிவி'யில் நேரலை செய்கின்றனர். நீங்கள் அமைதியாக வீட்டுக்குச் சென்று, 'டிவி'யில் பாருங்கள் ' என்றார்.அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'டிவியில பாத்துக்கலாமுன்னு, வீட்டுலையே இருக்காம, இங்கே இவ்வளவு நேரம் காத்திருந்த நாம் முட்டாள்களா...' என, ஆவேசப்பட்டார்.சுற்றியிருந்தோர், அதை ஆமோதித்தனர்.-

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X