அரசியல் செய்தி

தமிழ்நாடு

தட்டிக் கேட்க திராணி இல்லாதவர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., தாக்கு

Updated : மார் 31, 2021 | Added : மார் 29, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை:''பெண்களை கீழ்த்தரமாக பேசும் பேச்சாளர்களை, தட்டிக் கேட்க திராணி இல்லாதவர், ஸ்டாலின்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று காலை, மயிலாப்பூர், தி.நகர், அண்ணாநகர் தொகுதிகளில் பிரசாரம் செய்து பேசியதாவது: ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, தி.மு.க.,வினர், பெண்களை அவமானப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும், கீழ்த்தரமாகவும்
Tamilnadu Elections 2021, EPS, MK Stalin, DMK, ADMK

சென்னை:''பெண்களை கீழ்த்தரமாக பேசும் பேச்சாளர்களை, தட்டிக் கேட்க திராணி இல்லாதவர், ஸ்டாலின்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.

சென்னையில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று காலை, மயிலாப்பூர், தி.நகர், அண்ணாநகர் தொகுதிகளில் பிரசாரம் செய்து பேசியதாவது: ஆட்சி அதிகாரம் இல்லாதபோதே, தி.மு.க.,வினர், பெண்களை அவமானப்படுத்தியும், கொச்சைப்படுத்தியும், கீழ்த்தரமாகவும் பேசுகின்றனர்.

தேர்தலில், இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் பேச்சாளர்களை, தட்டிக் கேட்கும் திராணி இல்லாத தலைவராக, ஸ்டாலின் உள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம், அவதுாறு பரப்பி வருகிறார். தி.மு.க., 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது போல பேசி வருகிறார்.

கனவு வேண்டுமானால் காணலாம்; நிஜம் ஆகாது. தி.மு.க., எப்போதும் குறுக்கு வழியை தான் கையாளும். தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பின், சட்டசபையில் அவர் மீது, புத்தகத்தை வீசினர்; பேச விடாமல் தடுத்தனர். அதேபோல், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஜெயலலிதா சேலையை பிடித்தும், முடியை பிடித்தும் இழுத்தனர். அவருக்கே அந்த நிலைமை என்றால், நாட்டு மக்கள் நிலைமை என்னவாகும் என, சிந்தித்து பார்க்க வேண்டும்.

சட்டசபையில் அராஜகத்தில் ஈடுபடும் தி.மு.க.,வினரிடம், நாட்டை ஒப்படைத்தால், நாடு எப்படி தாங்கும் என்பதையும், மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். சமீபத்தில், சட்டசபையில், நான் பேசியபோது, அராஜகத்தில் ஈடுபட்டனர். மேஜை மீது நின்று நடனமாடினர். தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும், அராஜகம், அடாவடித்தனம் தான் செய்வர்.

தி.நகர் பகுதியில், வியாபாரிகள் அதிகம் உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில், உங்களை யாரும் தொல்லை செய்ததில்லை. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நீங்கள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியாது. இவ்வாறு, முதல்வர் பேசினார்.


'பக்தி இருந்தால் உயர்வு கிடைக்கும்!'


சென்னை, தி.நகர் பிரசாரத்தில், முதல்வர் பேசியதாவது:ஸ்டாலின் போகும் இடமெல்லாம் என்னைப் பற்றித்தான் பேசுகிறார். 'இ.பி.எஸ்., பல்லாண்டு வாழ வேண்டும்' என்று கூறி வருகிறார். இவர் சொல்லியா நான் வாழ வேண்டும். இறைவன் அருளால் நான் வாழ்கிறேன்.நாங்கள் தெய்வ பக்தி உடையவர்கள், அவர்களைப் போல கோவிலுக்கு சென்றால், விபூதியை அழிப்பவர்கள் அல்ல.

தேவர் நினைவிடத்துக்குசென்றபோது, அங்கு வழங்கிய திருநீறை கீழே கொட்டியவர் ஸ்டாலின். நாங்கள் உண்மையான தெய்வ பக்தி கொண்டவர்கள். தெய்வ பக்தி இருப்பவர்களிடம், இரக்கம் இருக்கும்; பண்பு இருக்கும்; உயர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
31-மார்-202102:24:05 IST Report Abuse
Aarkay வரைமுறையற்ற பிதற்றல்களும், EVM குறித்த சந்தேகங்களும், திருடர் முன்னேற்ற கழகத்தின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இவர்கள் உளற உளற, எதிராணியினரின் வெற்றிவாய்ப்பு கூடும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-மார்-202120:22:30 IST Report Abuse
Lion Drsekar மன்னிக்கவும் இவருக்கு எல்லாம் இருந்தும் அவர்கள் தவறே செய்தாலும் நீதிமன்றம் சென்று வெற்றி பெறுவதில் வல்லவர்களாக இருப்பதால் இவரும் பயந்து சென்றால் பொதுமக்களின் நிலை, ? வந்தே மாதரம்
Rate this:
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
30-மார்-202122:01:02 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிதுவாப்பா கல்லாப்பெட்டி சிங்காரம் உனக்கு வாழ்வு தான் நீ என்ன கருது என்றாலும் போடு விடுவார்கள் நீ புரசைவாக்கம் சர்ச்சில் சுத்துகிறவன் அப்பரும் என்ன...
Rate this:
Cancel
saravan - bangaloru,சவுதி அரேபியா
30-மார்-202117:06:30 IST Report Abuse
saravan தட்டிக்கேட்ட அப்புறம் கனிமொழி தி மு க, டாலின் தி மு க...ன்னு கட்சி டமாலு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X