அடாவடி வசூல்: அள்ளும் போலீசார்... தடாலடி அரசியலில் இறங்கம் வேட்பாளர்!

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021
Advertisement
அனல் கக்கிய வெயில்... சற்றே தணிந்த மாலை வேளையில், சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா.''வா...மித்து'' என வரவேற்று, சோபாவில் அமர வைத்தாள் சித்ரா.'உடம்பு எப்படிக்கா இருக்கு, பரவாயில்லையா. திரும்ப டாக்டர்கிட்ட'செக் அப்' போகணுமா'' என, நலம் விசாரித்தாள் மித்ரா. ''வேண்டாம் மித்து; ஒண்ணும் பிரச்னையில்ல'' என்ற சித்ரா, காபி கலக்கி எடுத்து வந்தாள்.''மித்து, இன்னும்
 அடாவடி வசூல்: அள்ளும் போலீசார்... தடாலடி அரசியலில் இறங்கம் வேட்பாளர்!

அனல் கக்கிய வெயில்... சற்றே தணிந்த மாலை வேளையில், சித்ராவின் வீட்டுக்கு சென்றாள் மித்ரா.''வா...மித்து'' என வரவேற்று, சோபாவில் அமர வைத்தாள் சித்ரா.'உடம்பு எப்படிக்கா இருக்கு, பரவாயில்லையா. திரும்ப டாக்டர்கிட்ட'செக் அப்' போகணுமா'' என, நலம் விசாரித்தாள் மித்ரா.

''வேண்டாம் மித்து; ஒண்ணும் பிரச்னையில்ல'' என்ற சித்ரா, காபி கலக்கி எடுத்து வந்தாள்.''மித்து, இன்னும் ஒரு வாரம் தான்டி. எலக்ஷன் பரபரப்பு ஓய்ஞ்சிடும்,'' சித்ரா சொன்னதும், ''எலக்ஷன் பரபரப்பு ஓய்ஞ்சாலும், கட்சிக்குள்ள உட்பூசல் ஓயாது போலிருக்கே,'' என்றாள் மித்ரா.''அப்படியா என்னாச்சு?''

''திருப்பூர் சவுத் தொகுதில, ஒன்றிய அளவுல'யூத் விங்' பொறுப்புல இருக்கற நிர்வாகிக்கும், மாவட்ட கவுன்சிலரா இருக்கற ஒருத்தருக்கும் 'ஈகோ' பிரச்னையாம்,''''வார்டில் கட்சிக்கொடி ஏத்தறப்ப, ரெண்டு பேருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கு. தொகுதி வி.ஐ.பி., தலையிட்டு சமரசம் பேசியிருக்காரு. இருந்தாலும், ரெண்டு பேரும் அடிச்சுகிட்டாங்களாம். ஒன்றிய பொறுப்புல இருக்க நிர்வாகி, ஹாஸ்பிட்டலுக்கு போய் 'ட்ரீட்மென்ட்' எடுத்துக்கிட்டார்,''

''இதெல்லாம் முடிஞ்சு, தேர்தல் பணிமனைல வச்சு பஞ்சாயத்து பேசினப்பவும், அங்கேயேயும் ரெண்டு பேரும் அடிச்சுகிட்டாங்களாம்'' விளக்கினாள் மித்ரா.''ஓ... அதுதான், பக்கத்து தெருவுல இருக்கற சந்திரசேகர், சாமிநாதன் அண்ணன்கிட்ட பேசிட்டு இருந்தாங்களா?'' என்றாள் சித்ரா.''யெஸ், அதே தான்,'' என்ற மித்ரா, ''காங்கயத்தில ஆளுங்கட்சியில செம லடாய்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''உள்ளூர் பொறுப்பாளரான சிவமயமானவர், வேட்பாளருக்கு எதிரா செயல்படறவங்கள கூப்பிட்டு பேசியிருக்கார். ஒண்ணும் எடுபடலையாம். உடனே, கோவை வி.ஐ.பி.,க்கு தகவல் சொல்லிட்டார்,''''மறுநாளே, அங்கே போன, 'மணி'யான வி.ஐ.பி., நாம இப்படி அடிச்சிகிட்டா, தி.மு.க., ஈஸியாக ஜெயிச்சிடும். ஒழுங்கா வேலை செய்லைன்னா, தலைமைக்கு கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்னு, தடாலடியா 'வார்ன்' பண்ணிட்டு போயிருக்காராம். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் வேட்பாளர் தவியாய் தவிக்கிறாராம்...,''

''எலக் ஷன் நேரத்தில், இதெல்லாம் சகஜம் மித்து. எல்லோரையும் 'கவனிச்சா' பிரச்னை சரியாயிடும்,'' என சிரித்த சித்ரா, ''கொரோனாவை காரணம் காட்டி, 'கை' பிரமுகர் எஸ்கேப் ஆன கதை தெரியுமா?'' புதிர் போட்டாள்.''யாருங்க்கா... அது?''

''சமீபத்தில், ஸ்டாலின் கூட்டத்துல, 'கை' கட்சியின் வடக்கு பொறுப்பாளர், கொரோனா வந்துடுச்சுன்னு சொல்லி கலந்துக்கிலையாம். இதே மாதிரி பலரும் மிஸ்சிங். இது தெரிஞ்சுகிட்ட சூரியகட்சிக்காரங்க 'அப்செட்' ஆகிட்டாங்களாம்,
''வீட்டு கதவை யாரோ தட்ட, ''இங்க கோபின்னு யாராவது இருக்காங்களா,'' என, கூரியர் கொண்டு வந்தவர் கேட்டார். ''நாலு வீடு தள்ளி கேளுப்பா'' எனக்கூறி, கதவை அடைத்து வந்தாள் சித்ரா.''அரசியல்வாதிகளை விட, அதிகாரிகளோட பாலிடிக்ஸ் அதுக்கும் மேல,'' என மித்ரா சொன்னவுடன், ''கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுடி?'' என்றாள் சித்ரா.

''அக்கா... திருப்பூர் வடக்கு, அவிநாசி தொகுதிக்கான செலவின தேர்தல் பார்வையாளரா லேடி ஆபீசர் இருக்கார். அவங்களுக்கு அசிஸ்டென்ட்டா, 'இன்கம்டாக்ஸ்' ஆபீசரை நியமிச்சு இருக்காங்க. இவங்க என்னடான்னா… பெரிய ஆபிசர் இல்லாம தனியாவே ஜீப் எடுத்துட்டு கிளம்பிடறாங்களாம்; ஆங்காங்கே, 'செக்கிங் வேற செய்றாங்களாம். இது, ரெவின்யூகாரங்களுக்கு சுத்தமா புடிக்கலையாம்,''அப்போது, மித்ராவின் போன் அலற, ''யாரு… விஜயலட்சுமி ஆன்ட்டியா, நல்லாயிருக்கீங்களா? வீட்டுக்கு போனதும் அம்மாவை பேச சொல்றேன்,'' என இணைப்பை துண்டித்தாள்.

''எலெக் ஷனுக்கு முன்னாடி, பட்டா மாறுதல் கேட்டு, நிறைய விண்ணப்பம் வந்துச்சு. எலெக் ஷன் அறிவிச்சதுக்கு அப்புறம், ஸ்டிரைக்கை வாபஸ் வாங்கிட்டாங்க. இப்ப, அந்த வேலைக்காக கலெக்ஷன் அள்றதா ஒரு பேச்சு உலா வருது,''''எலக் ஷன் வந்தா என்ன, வராட்டி என்ன, என்ற ரேஞ்சிலதான் சிலர் இருக்காங்க. என்ன பண்றது மித்து,'' சொன்ன சித்ரா, ''சவுத்தில், பறக்கும் படைக்கு பொறுப்பு ஆபீசரா இருக்க ஒரு டீம், தேர்தல் வேலைய விட, கடையில தான் அதிகமாக ஆய்வுக்கு போறாங்களாம்.

ஒரு வேல கலெக்ஷன் அதிகமோ,'' எனக்கூறி சிரித்தாள்.அப்போது 'டிவி'யில், கோழிப்பண்ணை விளம்பரம் ஒளிபரப்பானது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா... கோழிப்பண்ணையூர் தொகுதியில, பறக்கும் படையில் வீடியோ எடுக்கிற வேலையில, சில மீடியாகாரங்களும் இருக்காங்க. எடுக்கிற வீடியோவை அவங்க வேல பாக்குற 'டிவி'க்கும் யூஸ் பண்ணிக்கிறாங்களாம்,''

''அப்புறம், இவங்க எங்கே போறாங்கன்னு, முன் கூட்டியே தகவலை 'பாஸ்' பண்ணிடறாங்களாம். இதனால, பறக்கும் படையின் 'சீக்ரெட்' 'லீக் அவுட்' ஆகுதாம்,'' என்றாள்.''இப்படி இருந்தா எத்தனை படை வந்தாலும், பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாது. இதை எலக்ஷன் ஆபீசர்ங்க கவனிக்கணும். எல்லாம் கடவுள் 'கணேசனுக்கே' வெளிச்சம்,'' பெருமூச்சு விட்டாள் சித்ரா.''மித்து, இருட்றதுக்குல்ல. மார்க்கெட் போய் காய்கறி வாங்கிட்டு வந்துடலாம்'' என சித்ரா கூற, இருவரும் நடந்தே சென்றனர்.

தெருமுனையில், ஜீப்பில் நின்றபடி, வாகன செக்கிங் செய்து கொண்டிருந்தனர் போலீசார்.அதைப்பார்த்த சித்ரா, ''இப்படி கூட போலீஸ்காரங்க செய்வாங்களா...'' என்றாள்.''ஏங்க்கா, எதை வச்சு சொல்றீங்க?''

''மூனு நாளைக்கு முன்னாடி, கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர், திருப்பூருக்கு வேலை விஷயமா டூவீலர்ல வந்திருக்காரு. புஷ்பா சிக்னல்ல நிற்கும் போது, பின்னாடி, டூவீலர்ல வந்த ரெண்டு போதை ஆசாமிங்க அந்த வாலிபரோட டூவீலர் மேல மோதியிருக்காங்க,''''அவங்க பேசிட்டு இருக்கும் போது, 'மப்டியில்' போன 'நார்த்' போலீசார், ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு போயி, நான்கு இலக்கு தொகைய கேட்டிருக்காங்க.

'எதுக்கு சார் நான் பணம் கொடுக்கணும்'னு, அந்த வாலிபர் கேட்க, கொடுக்கலைன்னா பெரிய கேஸ் போட்டு, உள்ளே தள்ளிடுவோம்ன்னு மிரட்டியதால, அவரும் பயந்து போய், பணத்தை ரெடி பண்ணி கொடுத்துட்டு போனாராம்,''

''அடக்கொடுமையே,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.''இருடி. இதே மாதிரி இன்னொரு மேட்டரும் சொல்றேன் கேளு'' தொடர்ந்தாள் சித்ரா, ''பழைய பஸ் ஸ்டாண்ட் பாலம் அருகே, சிலர் லாட்டரி வித்துட்டு இருந்தாங்க. அங்க 'சவுத்' போலீஸ்காரங்க திடீர்ன்னு போகவும், அந்த கும்பல், லாட்டரிகளை, பக்கத்துல இருக்கற கடைக்காரர் மேல வீசிட்டு, எஸ்கேப் ஆயிட்டாங்க,'''' இதை தெரிஞ்சும் கூட, அந்த கடைக்காரரை போலீஸ்காரங்க கூப்பிட்டு போய் மிரட்டி, ஸ்டேஷன் பின்னாடி இருக்க சின்ன ரூம்ல வச்சு, பெரிய அமவுன்ட்டா வாங்கிட்டாங்களாம்,''

''இதை எப்படியோ தெரிஞ்சுகிட்ட ஒரு சமூக ஆர்வலர், தன்னோட'பேஸ்புக்' பக்கத்துல, பதிவிட்டாரு. இதையெல்லாம் கரெக்டா மோப்பம் பிடிச்ச ஒற்றர் படையினர், அவர்கிட்ட பேசி, பதிவை நீக்க வச்சுட்டாங்களாம்,''

''ஆனா, கலெக் ஷன் பண்ண போலீஸ்காரங்க மேல எந்த ஆக்ஷனும் எடுக்கலையாம். இதையெல்லாம் கண்டுக்க வேண்டிய 'சிட்டி' ஆபீசர், அமைதியா இருக்கார்,''''எலக் ஷன் முடிஞ்சு நடவடிக்கை எடுப்பாரோ, என்னவோ?'' என்ற மித்ரா, ''அஞ்சு வருஷமா ஒரே இடத்தில குப்பை கொட்டிய லேடிய மாத்திட்டாங்களாம்,'' கடைசி மேட்டருக்கு தாவினாள்.''அது என்னடி விஷயம்''

''அக்கா... பூண்டி லிமிட்டிலுள்ள வாரணாசி... பிரிவில், ஒரு ஏட்டம்மா, தொடர்ச்சியா, அஞ்சு வருஷம் அங்கேயே 'பீட்' பார்த்திருக்கார். இதப்பத்தி கேட்டா, 'கைக்குழந்தை வச்சிருக்கேன்னு' சொல்லியே ஓட்டிட்டாங்க,''''பத்து நாளைக்கு முன்னாடி, அந்த ஏரியாவில், 'ஒரு தரப்பினர் கூடிட்டாங்க. ஏதோ பிரச்னை,'னு ஒற்றர் படைக்கு ஏட்டம்மா தகவல் குடுத்திருக்காங்க...'''

'உடனே, அடிச்சுப்பிடிச்சு, பெரிய படையோட போலீஸ் போனப்ப, அங்க எந்தப்பிரச்னையும் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டே போனாங்களாம். இப்படி பொய்யான தகவலை சொன்னதால, 'கடுப்பான' அதிகாரி, ஏட்டம்மாவை வேற ஏரியா 'பீட்'டுக்கு அனுப்பிட்டாரு. இருந்தாலும், பழைய இடத்துக்கு வர்றதுக்கு, பலரிடம் தொடர்ந்து ஏட்டம்மா பேசிட்டே இருக்காங்களாம்,'

'''அதுக்கென்னப்பா பண்றது, எல்ேலாரும், அவங்கவங்க வீட்டுக்கு பக்கத்தில டூட்டி கேட்டா குடுக்க முடியுமா? அப்ப எப்படி வேல செய்றதுன்னு, பலரும் ஓபனா பேசறாங்களாம்,''''போலீஸ்காரங்களே இப்படி இருந்தா எப்படிடி,'' என்ற சித்ரா, ''சரி, வாடி போலாம்,'' என சொல்ல, பின் தொடர்ந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X