தமிழ்நாடு

எதிர்பார்ப்பு: சிதம்பரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? தொகுதியைக் கைப்பற்ற கடுமையான போட்டி-

Added : மார் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிதம்பரத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ., பாண்டியன் மீண்டும் தொகுதியை தக்க வைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.சிதம்பரம் சட்டசபை தொகுதி, சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை பேரூராட்சிகள், புவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள் என 69 ஊராட்சிகளை உள்ளடக்கியது.சிதம்பரம்
 எதிர்பார்ப்பு: சிதம்பரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? தொகுதியைக் கைப்பற்ற கடுமையான போட்டி-

சிதம்பரத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ., பாண்டியன் மீண்டும் தொகுதியை தக்க வைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சிதம்பரம் சட்டசபை தொகுதி, சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை பேரூராட்சிகள், புவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள் என 69 ஊராட்சிகளை உள்ளடக்கியது.சிதம்பரம் நடராஜர் கோவில், கிள்ளை காளி கோவில், பிச்சாவரம் வன சுற்றுலா மையம் பிரசித்தி பெற்றவை. டெல்டா பகுதியான இங்கு, விவசாயம், மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது.விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். வன்னியர்கள், ஆதிதிராவிடர்களுக்கு அடுத்ததாக மீனவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர்.சிதம்பரம் நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம், கொள்ளிடக்கரையோர கிராம மக்கள் பலர் முதலை தாக்குதலில் இறந்துள்ளனர். இப்பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க நிரந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.சிட்டிங் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாண்டியன் உள்ளார். இவரே வரும் தேர்தலிலும் களத்தில் உள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான், அ.ம.மு.க., நந்தினி தேவி, நாம் தமிழர் கட்சி நடராஜன் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தேவசகாயம் உட்பட 11 பேர் களத்தில் உள்ளனர்.இத்தொகுதியில் 1952, 1957ம் ஆண்டு வரை இரட்டை உறுப்பினர்கள் நடைமுறை இருந்தது. அதன் பிறகு 1962ம் ஆண்டு முதல் ஒரு உறுப்பினர் முறைக்கு மாற்றப்பட்டது. தொகுதியில் இதுவரை காங்., 5 முறை, தி.மு.க., 4, அ.தி.மு.க., 4, த.மா.கா., மற்றும் மா.கம்யூ., தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியை தி.மு.க.,வினர் கேட்டு எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் உடன் பிறப்புகள் வருத்தத்தில் உள்ளனர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமான் சிதம்பரம் தொகுதிக்கு புதியவர். தொகுதியில் உள்ள முஸ்லிம் ஓட்டுக்கள் சிதறாது என்ற நம்பிக்கையில் உள்ளார்.தி.மு.க., - காங்., - கம்யூ., மற்றும் வி.சி., கட்சியினர் கை கொடுத்தால் ஏணிக்கு ஏறுமுகம் தான்.அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருப்பது பாண்டியனுக்கு பலம். கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு கணிசமான ஓட்டுகள் இருப்பது. தொகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான பழைய கொள்ளிடம் ஆற்றில் பெராம்பட்டு - திட்டுக்காட்டூர் இடையே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவது.குண்டலப்பாடியில் வெள்ள தடுப்பு அணை கட்டப்பட்டு வருவது உள்ளிட்டவைகள் அவருக்கு சாதகமான அம்சம். இவர், மீண்டும் தொகுதியை தக்க வைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது
நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A P - chennai,இந்தியா
02-ஏப்-202116:15:57 IST Report Abuse
A P இத்தொகுதியில் தி மு க கூட்டணி வென்றால், கருணாநிதி சூளுரைத்தது போல, சிதம்பரம் கோவிலை பீரங்கி வைத்துப் பிளந்தார்களென்றாலும் ஆச்சர்யப் பட ஒன்றுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X