அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் அத்தியாயம் முடியும் என்கிறார் ராமதாஸ்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சோளிங்கர்: ''சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வின் அத்தியாயம் முடிந்துவிடும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து, நெமிலியில் நேற்று அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி இருக்காது. பெரிய மாவட்டமாக வேலுார் இருப்பதால், அதை பிரிக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கையை,
TamilnaduElections, PMK, Ramadoss, DMK, பாமக, ராமதாஸ், திமுக, அத்தியாயம்

சோளிங்கர்: ''சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க.,வின் அத்தியாயம் முடிந்துவிடும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து, நெமிலியில் நேற்று அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி இருக்காது. பெரிய மாவட்டமாக வேலுார் இருப்பதால், அதை பிரிக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கையை, முதல்வர் நிறைவேற்றினார். பா.ம.க., எடுத்துரைத்த கோரிக்கைகளை எல்லாம், அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை அமுதசுரபி. பா.ம.க., தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், எதையும் நிறைவேற்ற முடியாது. இந்த தேர்தலுக்கு பின், தி.மு.க., வின் அத்தியாயம் முடிந்து விடும். அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமையும். அதில், எந்த மாற்றமும் இல்லை. அப்போது மருத்துவம், கல்வி இலவசமாக கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil news


நிர்வாகிகளுக்கு 'டோஸ்' வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் வேலழகன் போட்டியிடுகிறார். ஆனால், கூட்டணியில் உள்ள, பா.ம.க.,வினர், அவருக்கு எதிராக, உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேலழகன் எங்கு சென்றாலும், என்ன பேசினாலும், எதிரணியில் உள்ளவர்களுக்கு தெரிந்து விடுகிறது.
இது குறித்து, பா.ம.க., மேலிடத்திற்கு, அ.தி.மு.க., தலைமை தகவல் அனுப்பியது. உள்ளடி வேலையில் ஈடுபட்ட, பா.ம.க., நிர்வாகிகளை வேலுாருக்கு வரவழைத்து, ராமதாஸ், 'டோஸ்' விட்டார். அப்போது, 'ஆளுங்கட்சி வேட்பாளர் வேலழகனும், வன்னியர் தான். அவர் வெற்றி பெற்றே ஆக வேண்டும். கடந்த தேர்தலில் செய்தது போல உள்குத்து வேலையில் ஈடுபட்டால், கட்சியை விட்டே நீக்கி விடுவேன்' என, எச்சரித்து அனுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
30-மார்-202120:48:55 IST Report Abuse
Devanand Louis சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில்( தமிழ் நாடு எலக்ட்ரிகல் லைசென்சிங் போர்டு ) லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள். கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் சென்னை-கிண்டி மின்சார உரிமம் வழங்கும் வாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்திற்கு ,மேலும் அங்குள்ள டெலிபோன் நம்பர்களை 04422500291 & 04422500494 & 04422500036 தொடர்புகொண்டாள் யாரும் வேண்டுமென்றே டெலிபோனை எடுப்பதில்லை. கண்டிப்பாக விஜிலென்ஸ் ரைடு தேவை ,தினமலரின் உதவியும் தேவை
Rate this:
Cancel
30-மார்-202118:18:39 IST Report Abuse
குமார் இதே மரம் வெட்டி கிட்ட திமுக ஒரு ஸ்வீட் box அதிகமாக கொடுத்தால், அதீகம்கா வுக்கு இது கடைசி தேர்தல் என்பார்.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
30-மார்-202121:34:09 IST Report Abuse
Ramesh Sargamஅதுவும் சரிதான்....
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
30-மார்-202117:53:54 IST Report Abuse
Bhaskaran Minoritythimuka aatchiyai thaangipidichathil vaangiya sweet box ennimudicheengalaa ..no.one santharpavaathi ivar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X