காங்கயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பங்கேற்க, தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் கயல்விழி வந்தார். அவர் பேசி முடிக்கும் வரை, கை கூப்பிய நிலையில் இருந்த அவர், கூட்டம் முடிந்ததும் காரில் புறப்பட்டார்.காங்கயம் ரவுண்டானா, பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது, அப்பகுதியில் நின்றிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இதைப்பார்த்த பெண்களில் ஒருவர், 'காங்கயத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் கூட தேர்தலில் நிற்கவில்லையே.
அப்ப இவங்க யாரு?' என்றதும், இதைக்கேட்ட மற்றொரு பெண், 'அவங்க தாராபுரம் வேட்பாளர். ஸ்டாலின் பிரசாரத்துக்காக காங்கயத்துக்கு வந்திருக்கிறார்,' என்றார்.'முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால், யாரை பார்த்தாலும் கையெடுத்து கும்பிடு போடறது பழக்க தோஷமாயிடுச்சு. அதனால, தொகுதி விட்டு தொகுதி வந்தாலும், கும்பிடறது மறக்கவில்லை,' என பெண்கள் பேசி கொண்டே நகர்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE