அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள்: கமல்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (48)
Share
சென்னை: அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார்.சென்னை வேளச்சேரியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரசியல் சாக்கடை எனக்கூறி பலர் அதனை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், அரசியல் சாக்கடை என்பதை ஒத்து கொண்டு அதில் இறங்கி, துப்புரவு செய்யும்
அரசியல், சாக்கடை, கமல், கமல்ஹாசன், மநீம, மக்கள் நீதி மய்யம்,  poltics, kamal, kamalhaasan, MNM, Makkal Neethi Mayyam,

சென்னை: அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளிகள் நாங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறி உள்ளார்.

சென்னை வேளச்சேரியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரசியல் சாக்கடை எனக்கூறி பலர் அதனை வேண்டாம் என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், அரசியல் சாக்கடை என்பதை ஒத்து கொண்டு அதில் இறங்கி, துப்புரவு செய்யும் துப்புரவு தொழிலாளி நாங்கள்.அரசியலை நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் நாளைய தலைமுறை உங்களையும் எங்களையும் திட்டுவார்கள்.


latest tamil news



நற்காலியை பிடித்து கொண்டு நகர மாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம். மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும். தாய்மார்களுக்கு நான் குழந்தையாக தெரிகிறேன். சிறுவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X