பொது செய்தி

இந்தியா

மோடி வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும்: டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையையொட்டி அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால், இது தொடர்பான ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டானது.தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று (மார்ச் 30) தமிழகம்
GoBackModi, GoBackFascistModi, TNWelcomesModi, TNWithPMModi, Modi, PM,

சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகையையொட்டி அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால், இது தொடர்பான ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் டிரெண்டானது.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று (மார்ச் 30) தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். தாராபுரத்தில் பா.ஜ., அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எல்லாம் ‛GoBackModi' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி விடும். அதேபோல் இம்முறையும் இன்று அதிகாலை முதலே ‛GoBackModi' ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரண்ட் ஆகி வருகிறது. அதேநேரத்தில் மோடியை வரவேற்கும் விதமாக ‛TNWelcomesModi' என்னும் ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி உள்ளது.


latest tamil news



திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி, தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டேக்குகள் உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர். மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு செய்துள்ள அநீதிகளை சிலர் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மறுபுறம், மோடி அரசு தமிழகத்திற்கு கொண்டுவந்துள்ள திட்டங்கள் குறித்து பதிவிட்டு அவரது வருகையை வரவேற்கின்றனர். பலரும், ‛நீட்டை கொண்டுவந்து பல ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மோடி அவர்களே தமிழகத்தை விட்டு போங்கள்' என பதிவிடுகின்றனர். மோடியை வரவேற்கும் சிலர், ‛சிறந்த நிர்வாகத்தால் இந்தியாவை வழிநடத்திவரும் மோடியின் வழியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது' என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


latest tamil news



கோவையில் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளை காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் சிலர் போராட்டம் நடத்தினர். இதனால், மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, #GoBackFascistModi ஆகிய ஹேஸ்டேக்குகளும், ஆதரவாக #TNWelcomesModi, #TNWithPMModi போன்ற ஹேஸ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
31-மார்-202105:29:07 IST Report Abuse
Nachiar நீண்ட காலத்திற்கு பின் மேற்கத்தைய உலகில் இந்தியனை தலை நிமிர வைத்த மாமனிதர் வாழ்க.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
31-மார்-202103:39:58 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இந்த தமிழ் விரோத/கடவுள் மறுப்பு கூட்டம் சொல்லவேண்டியது ராஹுல் காந்தியைத்தான். அவர்கள் ஆட்சியில் தானே ஐந்து லட்சம் தமிழர்கள் சிங்களத்தில் கொல்லப்பட்டார்கள். பொய்யில் புரட்டி எடுத்த இந்த திராவிட கட்சிகள் "பெய்ட் மீடியா" வை வைத்துக்கொண்டு பொய் பிரச்சாரம் செய்கின்றன. இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
31-மார்-202100:54:23 IST Report Abuse
Rajagopal திருடங்க எல்லாரும் கோ பாக் மோடின்னுதான் கோஷம் போடுவானுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X