அரசியல் செய்தி

தமிழ்நாடு

234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் பழனிசாமி

Updated : மார் 30, 2021 | Added : மார் 30, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
திருப்பூர்: சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ., மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பிரதமர் மோடி, இந்தியா
TamilnaduElections, CM, Palanisamy, EPS, OPS, PMModi,

திருப்பூர்: சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ஜ., மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பிரதமர் மோடி, இந்தியா உயர்வடைய நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என உழைத்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு கொடுத்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால் தான் திட்டங்களுக்கு நிதி கிடைத்து, நிறைவேற்ற முடியும்.


latest tamil news


உலக அளவில் இந்திய நாடு பெருமை அடைவதற்கு பிரதமர் மோடியின் அயராத உழைப்பே காரணம். தமிழகத்தில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால் தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரும்போது நேரடியாக, மறைமுகமாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.


latest tamil news


இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரசுக்கான சோதனைகளை அதிகளவு செய்ததால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சி மலர செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பிரதமர் மோடியை தமிழகம் மற்றும் தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆட்சி செய்து காங்கிரஸ் சீர்குழைத்தது. நமது நாட்டில் எவ்வித வளர்ச்சி பணிகளும் இல்லாமல் பின்னோக்கி கொண்டு சென்றது. காங்கிரசும், திமுக.,வும் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மத்தியில் ஆளும் பொறுப்பில் இருந்தும், தமிழகத்திற்கு எந்தவித திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால், பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு வேண்டிய நிதியை தாராளமாக கொடுத்து வருகிறது. காங்., ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு கஷ்டப்பட்டோம். ஆனால், பாஜ., ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிக்கு அரசாணை மூலம் அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


காங்., திமுக ஆட்சியில் தான், காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், ஜல்லிக்கட்டிற்கு நீதிமன்றம் தடைவிதித்தது. மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது நான் முதல்வராக இருந்தேன். இந்த போராட்டத்தை பிரதமர் மோடியிடம் கொண்டு சென்றேன். 24 மணிநேரத்தில் 4 துறைகளுக்கு அரசாணை வெளியிட்டு, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கினார். எனவே, மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
30-மார்-202123:14:04 IST Report Abuse
தல புராணம் ஆயிரம் பெண்கள் சித்திரவதைக்குள்ளானார்கள்...திமுகவை தவிர எவனும் கேக்கல்லை..காவிக்கூட்டமும் அல்லகைகளும் வரலை... பலநூறு பெண்கள் தற்கொலை செய்து மாய்ந்தார்கள்.. திமுகவை தவிர எவனும் போராட வரலை.. தூத்துக்குடியில் ஒரு தாயை தலையில் சுட்டு கொன்னது இந்த கொலைகார அரசு.. தூத்துக்குடியில் இரண்டு இளம்பெண்களை சுட்டு கொன்றது இந்த ரத்த காட்டேரி அரசு.. எந்த காவிக்கூட்டமும் அல்லகைகளும் வரலை... போதாத குறைக்கு அவர்களை சமூகவிரோதிகள்ன்னு சொன்னது இந்த பா-சிச கூட்டம்.. உயர் பெண் போலீஸ் அதிகாரிக்கே பாலியல் கொடூரம்.. திமுகவினர் போராட வந்தனர்.. காவிக்கூட்டமும் அல்லகைகளும் வரலை... போலீஸ் துறையில் பெண் போலீசாருக்கு நித்தமும் பாலியல் சித்திரவதை (மலர் செய்தி).. அத்தனையும் ஆப்பிரிக்காவிலா நடந்தது.. காவிக்கூட்டமும் அல்லகைகளும் வரலை... பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. ஊர்ந்து வாழும் அடிமைகளுக்கு அவன் பாலியல் வக்கிர கட்சிகாரனை காப்பாத்தணும்..காவிகளுக்கு கமிஷன் மேலே கண்ணு.. லஞ்சம், பதவி வெறி, லஞ்சம், துரோகம், லஞ்சம், காலில் விழுந்தாவது பதவி - இதை தவிர எந்த நிர்வாக திறனும் இல்லை.. பஜாக்காவின் கள்ள கூட்டில் பதவியில் தாக்கி நின்றது, பதவிக்கு வந்தது எப்படி ?? அதைப்பற்றிய விமர்சனத்தை கூட வெட்டி ஒட்டி திரித்து, தனது அரசியல் காரணத்துக்கு, தனது தாயைவே பழனிஸ்ஸ்சாமி களங்கப்படுத்திக்கொள்கிறார்.. பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும், சமாளிக்கும் திறமை உண்டு இல்லையா.. தீமூக்கா தலைவர் ஸ்டாலினை, "கருணாநிதி அவங்க அப்பா என்று சந்தேகமா?" என்று கேள்வி எழுப்பினார்.. அப்போ இந்த பத்திரிக்கைகள் சகலத்தையும் அடைத்துக்கொண்டு இருந்தனவே? அதெல்லாம் இந்த சங்கி கூட்டத்துக்கு தெரியலை.. ஆனால் மக்கள் மறக்கல்லை..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
30-மார்-202123:13:49 IST Report Abuse
தல புராணம் 1. முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது வருமானத்திற்கு அதிகமாக 200.21 கோடி ரூபாய் அளவுக்கு தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார். 2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது "காக்னிஸன்ட்" கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் ஆகிய புகார்கள். கவர்னரின் மாளிகையில் தூங்குகிறது.. பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்குகளை கொள்முதல் செய்து 875 கோடி ரூபாய் ஊழல் செய்ததாகப் புகார். கவர்னரின் மாளிகையில் தூங்குகிறது.. பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 4. மின்வாரியத் துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார். கவர்னரின் மாளிகையில் தூங்குகிறது.. பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் விலை கொடுத்து வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார். பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள். பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1,950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார். பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும். 8. மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் புகார். பாஜாக்காவுக்கு தெரியாமல் இருக்கலாம். மக்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
30-மார்-202122:31:36 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் கலைஞர் ஒரு பொது கூட்டத்தில் பேசியது: " நீதி " க்கு முன்பு 'அ' போட்டால் என்ன வரும்? மக்கள் சொன்னார்கள் " அநீதி " " நியாயத்திற்கு " முன்னால் ' அ' போட்டால் என்ன வரும்? மக்கள் சொன்னார்கள்" அநியாயம்". " சுத்தம் " முன்னாடி' அ' போட்டால் என்னவரும் ? மக்கள் சொன்னார்கள் " அசுத்தம்". மீண்டும் கலைஞர் கேட்டார் " யோக்கியன்" முன்னாடி 'அ' போட்டால் என்ன வரும்? மக்கள் சொன்னார்கள்: " அயோக்கியன்". இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு ' அ ' போட்டது வேண்டுமா? ' அ ' போடாதது வேண்டுமா? மக்கள் சொன்னார்கள் 'அ' போடாதது தான் வேண்டும். அப்போது கலைஞர் சொன்னார். சிந்தியுங்கள் மக்களே............ " திமுக "விற்கு முன்னால் ' அ ' போட்டிருக்கிறார்கள். திமுக வா? அதிமுக வா? இதை கேட்ட எம்.ஜி.ஆர் ஓடிப்போய் தன் கட்சியின் பெயரை அஇஅதிமுக என்று மாற்றியது வேறு கதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X